ஆடுகளத்தில் பந்தைச்சுரண்டி சட்டவிரோதமான முறையில் எதிரணியினருக்கு எதிரான உபாயத்தை கையாண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் தண்டனைக்குள்ளாகி 15 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னொரு ஆஸ்திரேலிய வீரர் அதே குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் அவர் குறித்த காணொளி இணையமெங்கும் வைரலாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்திய அணியுடனான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் Adam Zampa பந்தை சுரண்டினார் என்று சில படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் Aaron Finch ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது - கை ஈரலிப்பாகாத வண்ணம் கதகதப்பாக்குவதற்கான துணியை (hand warmer) Adam Zampa பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியை புரட்டிப்போட்ட பந்து சுரண்டல் விவகாரம் கடந்த பதினைத்து மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்று மூன்று வீரர்களுக்கு எதிரான தண்டனை வழங்கப்பட்டது மாத்திரமல்லாமல் அணியின் பயிற்றுனர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
