Stock photo of a woman on a video call with her father
Stock photo of a woman on a video call with her father
This article is more than 3 years old

Explainer

உங்கள் பெற்றோர் வெளி நாட்டில் இருந்தால், அவர்களை எப்படி இங்கே வரவைக்கலாம்?

இந்நாட்டுக் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் பெற்றோர்கள் இப்போது நாட்டிற்கு வர அனுமதிக்கப்படுவார்கள். புலம்பெயர்ந்து இங்கு குடியிருக்கும் பலரும் வரவேற்கும் செய்தி இது. ஆனால், அந்தப் பெற்றோர் இங்கு வருவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. தடுப்பூசியை அவர்கள் முழுமையாகப் போட வேண்டும், அத்துடன் அவர்களின் ஆவணங்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்.

Published

Updated

By Akash Arora, Kulasegaram Sanchayan
Source: SBS News

இங்கு வருவதற்குப் பயண விலக்குக் கோரி யார் விண்ணப்பிக்கலாம்?

COVID-19 தொற்று பரவுவதைத் தடுக்க, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் எமது எல்லைகள் குடிமக்கள் அல்லாதவர்கள் மற்றும் குடியுரிமை பெறாதவர்களுக்கு மூடப்பட்டது.  இருந்தாலும், குடிமக்கள் மற்றும் குடியுரிமை பெற்றவர்களின் மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் (மனைவி, கணவன் அல்லது இணைந்து வாழும் துணைவர்; குழந்தை அல்லது சார்ந்திருக்கும் குழந்தையின் பெற்றோர்/சட்ட பூர்வ பாதுகாவலர்) இங்கு வருவதற்குப் பயண விலக்குக் கோரி விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர், அதனால் அவர்கள் மட்டும் நாட்டிற்குள் அனுமதிக்கப் பட்டார்கள்.

[node_list title="மேலும் அறிய" uuid="1761fa34-d531-496d-a8e5-c41d3e712330"]

நாட்டிற்கு வருவதற்கு, பெற்றோரும் மிக நெருங்கிய உறவினர் என கணிக்கப்படுவர் என்ற அறிவிப்பை, பிரதமர் Scott Morrison சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.  இந்த மாற்றம் இன்று, நவம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந் நாட்டிற்கு வர விண்ணப்பிக்கும் போது, ஒருவரைப் பெற்றெடுத்த (biological) மற்றும் தத்தெடுத்த (adoptive) பெற்றோர் மட்டுமின்றி, சட்டப்படி பெற்றோர் என்ற உரிமையுள்ளவர்களும் (legal, step-parent மற்றும் parent-in-law) மிக நெருங்கிய உறவினர் என நவம்பர் முதலாம் தேதிக்குப் பின்னர் கணிக்கப்படுவார்கள்.

[node_list title="மேலும் அறிய" uuid="eb78df2a-3688-4876-ba31-c3fe7bf560ac"]

என்ன வீசாவிற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்?

எந்த நாட்டுக் குடியுரிமை வைத்திருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில், பெற்றோர் பின்வரும் மூன்று குறுகிய கால வீசாக்களில் ஒன்றிற்கு விண்ணப்பிக்கலாம்.

1. eVisitor Visa (Subclass 651): இந்த வீசா கோரி, பின்வரும் ஐரோப்பிய நாட்டுக் குடியுரிமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: Austria, Belgium, Bulgaria, Croatia, Cyprus, Czech Republic, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Iceland, Ireland, Italy, Latvia, Liechtenstein, Lithuania, Luxembourg, Malta, Monaco, The Netherlands, Norway, Poland, Portugal, Romania, Republic of San Marino, Slovak Republic, Slovenia, Spain, Sweden, Switzerland, the United Kingdom மற்றும் Vatican City.

  • வீசா காலம்: ஆகக் கூடியது மூன்று மாதங்கள்.
  • விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் நேரம்: 31 நாட்கள் முதல் நான்கு மாதங்கள்
  • கட்டணம்: கட்டணம் எதுவும் இல்லை
“இந்த வீசா பெறுவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கலாம்” என்று பிரிஸ்பன் நகரைத் தளமாகக் கொண்ட குடிவரவு நிறுவனமான Fragomen இல் மூத்த ஆலோசகராகப் பணியாற்றும் Rebecca Baggiano கூறுகிறார்.  “ஆனால் அந்தச் செயலாக்க நேரத்தைக் குறைப்பதற்கான வழி, முதலில் வீசா கோரி விண்ணப்பத்தைப் பதிவுசெய்து விட்டு, அதன் பின்னர் பயணத்தடை விலக்குக் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.” (கீழே உள்ள விவரங்களைப் பார்க்கவும்).

“பயண விலக்கு அங்கீகரிக்கப்பட்டால், வீசா விண்ணப்பம் விரைந்து பரிசீலிக்கப்படும்.  பயணத் தடை விலக்கு ஒப்புதலை ஒருவர் பெற்றிருந்தால், வீசா விண்ணப்பங்கள் மிக விரைவாகப் பரிசீலிக்கப்படுவதை நாங்கள் கடந்த 18 மாதங்களில் அவதானித்திருக்கிறோம்.”

2. Electronic Travel Authority (Subclass 601): இந்த வீசா (ETA) கோரி, பின்வரும் ஐரோப்பிய நாட்டுக் குடியுரிமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: : Brunei, Canada, Hong Kong (SAR of China), Japan, Malaysia, Singapore, South Korea and the United States.

  • வீசா காலம்: ஆகக் கூடியது மூன்று மாதங்கள்.
  • விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் நேரம்: உறுதியாக சொல்ல முடியாது
  • கட்டணம்: 20 டொலர்கள்
உள்துறை அமைச்சின் இணையதளத்தில் ETA எத்தனை நாட்களில் வழங்கப்படும் என்ற காலவரையறை கொடுக்கப்படவில்லை.  “இருந்தாலும், AustralianETA என்ற செயலியை அரசு பரீட்சித்துப் பார்க்கிறது.  உங்களது கைத் தொலைபேசி (smartphone) கொண்டே ETA கோரி விண்ணப்பிக்கலாம்; அனேகமாக, அதே நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள் முடிவுகள் தெரியவரும்” என்கிறார் Rebecca Baggiano.

3. Visitor Visa (subclass 600): அனைவரும் (மேலே குறிப்பிட்டிருக்கும் நாடுகளின் குடியுரிமை கொண்டவர்கள் உட்பட,) இந்த வீசா கோரி விண்ணப்பிக்கலாம்.

  • வீசா காலம்: ஆகக் கூடியது பன்னிரண்டு மாதங்கள்.
  • விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் நேரம்: எட்டு முதல் 20 மாதங்கள்
  • கட்டணம்: 145 டொலர்கள்
“அனைத்து நாட்டினரும் இந்த வீசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்” என்கிறார் Rebecca Baggiano.

இந்த வீசாவின் காலம் (12 மாதங்கள்), மற்றைய இரண்டு வீசாக்களின் காலத்தை (3 மாதங்கள்) விட அதிகம் என்பதால், முதல் இரண்டு வீசா பெற தகுதியானவர்களும் இந்த வீசாவிற்கு விண்ணப்பிக்கக்கூடும்.
பயண விலக்கு கோரி பெற்றோர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?

குடிமக்கள் மற்றும் குடியுரிமை பெற்றவர்களின் பெற்றோர்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என்றால், பயண விலக்குக் கோரி உள்துறை அமைச்சின் இணையத் தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

குடிமக்கள் மற்றும் குடியுரிமை பெற்றவர்கள் இன்னொருவரின் சார்பாகவும் பயண விலக்குக் கோரலாம்.

இதற்காக உள்துறை அமைச்சின் இணையத் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.  உள்ளே நுழைந்தால், ஒரு இலகுவான படிவத்தை நிரப்ப வேண்டும்.  தேவையான ஆவணங்களை மின் நகல் (scan) எடுத்து இணைக்க வேண்டும்:

A. கடவுச் சீட்டுகள், பிறப்புச் சான்றிதழ்கள், குடியுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் வீசாக்கள் போன்ற ஆஸ்திரேலியக் குடிமகன் அல்லது நிரந்தரக் குடியிருப்பாளர் என்ற அடையாளப் படுத்தும் சான்றுகள்.

B. கடவுச் சீட்டுகள், பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ்கள் போன்ற ஆஸ்திரேலியக் குடிமகன் அல்லது நிரந்தரக் குடியிருப்பாளரின் பெற்றோரின் அடையாள சான்றுகள்.

C. விண்ணப்பதாரருக்கும் ஆஸ்திரேலியக் குடிமகன் அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்றவருக்கும் இடையிலான உறவை நிரூபிக்க, பிறப்புச் சான்றிதழ்கள் போன்றவை.

D. வெளிநாட்டில் இருப்பவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றுகள்.  நான்கு தடுப்பூசிகள் மட்டுமே தற்போது எமது அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன (Pfizer, Moderna, AstraZeneca, மற்றும் Johnson and Johnson).

இணையத் தளத்தில் ஆவணங்களைப் பதிவேற்ற முன்னர் அவற்றை இலகுவாக அடையாளம் காணக்கூடிய வகையில் “passport” அல்லது “birth certificate” என்று ஆவணங்களின் பெயரை மாற்றுவது நல்லது என்று Rebecca Baggiano அறிவுறுத்துகிறார்.

ஆவணங்கள் ஆங்கிலத்தில் இல்லை என்றால் என்ன செய்வது?

சமர்ப்பிக்கத் தேவையான ஆவணங்கள் ஆங்கிலத்தில் இல்லை என்றால், NAATI அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்துமாறு Rebecca Baggiano பரிந்துரைக்கிறார்.

பெற்றோர் எப்போது வரலாம்?

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பிரயாண ஒழுங்குகளை மேற்கொள்ள முன்னர் வீசா மற்றும் பயண விலக்கு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது முக்கியம் என்று Rebecca Baggiano கூறினார்.

சரியாக எப்போது வரலாம் என்பது உண்மையில் ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதேசத்தையும் சார்ந்துள்ளது என்றும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளில் தங்கி இருக்கிறது என்றும் Rebecca Baggiano கூறினார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand