மெல்பேர்ன் நகர கவுன்சில்களில் அறவிடப்பட்ட Parking அபராதங்கள் மற்றும் கட்டணங்கள் ஊடாக அரசுக்கு கடந்த ஆண்டு சுமார் 157.5 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 93 மில்லியன் டொலர்கள் மெல்பேர்ன் CBD ஊடாகவே பெறப்பட்டிருப்பதாகவும் இது 2017-18 நிதியாண்டில் கிடைத்த தொகையைவிட 20 மில்லியன்கள் அதிகம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அதேநேரம் The City of Port Phillip 30.3 மில்லியன்களையும், The City of Yarra 26.25 மில்லியன்களையும், Darebin Council 4.89 மில்லியன்களையும், Hobsons Bay 3.55 மில்லியன்களையும் Parking அபராதம் மற்றும் கட்டணங்கள் ஊடாக பெற்றிருக்கின்றன.
பொதுமக்கள் தமது வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து பொதுப்போக்குவரத்தினை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்பதையே இவ்வாறு வருடாவருடம் அதிகரித்துக்கொண்டு செல்லும் Parking அபராதம் மற்றும் கட்டணங்கள் எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நகரங்களில் வாகன தரிப்பிடங்களுக்கான நெருக்கடி ஏற்படுவதற்கு அதிகரித்துச் செல்லும் குடியிருப்புக்களும் சுற்றுலாப்பயணிகளின் வருகையுமே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
