வெளிநாட்டிலிருந்து சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி உடனடியாக மெல்பேர்னுக்கான விமானத்தில் ஏறி விக்டோரியாவிற்குள் நுழைந்துகொண்ட இருவர் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச்சம்பவம் நேற்று சனியன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
சிட்னியிலிருந்து சனிக்கிழமை மதியம் புறப்பட்ட VA 838 என்ற விமானத்தில் பயணித்தவர்களை உனடியாக தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும், தம்மோடு தொடர்புகொள்ளும்படியும் விக்டோரிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட இரு பயணிகளும் எந்த நாட்டிலிருந்து திரும்பினார்கள் என்பது குறித்தோ, விமான நிலைய அதிகாரிகளிடம் தப்பி எவ்வாறு சிட்னியிலிருந்து மெல்பேர்னுக்கு பறந்தார்கள் என்றோ இப்போதைக்கு எந்த தகவலும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
