SKIP TO MAIN CONTENT

பதவி விலகினார் வெளியுறவுத்துறை அமைச்சர்!

பதவி விலகினார் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Australian Foreign Minister Julie Bishop
Australian Foreign Minister Julie Bishop (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING Source: AAP

1 min read

Published

By Raymond Selvaraj

Source: ABC Australia


Skip to article content

ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Julie Bishop அவர்கள் தாம் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்.

தாம் அமைச்சர் பதவியிலிருந்து விலகினாலும், தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதோடு நாடாளுமன்றத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவின் நலன்களுக்கு வலுவாக குரல் தருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனாலும், அடுத்தவரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது  போட்டியிடுவதா அல்லது அரசியலிலிருந்து முழுமையாக விலகுவதா என்பது குறித்து தாம் முடிவு செய்யவில்லை என்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிகிழமை Malcolm Turnbull அவர்கள் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் அடுத்த பிரதமரை தெரிவு செய்ய  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நடந்த போட்டியில் Scott Morrison, Peter Dutton, Julie Bishop என்று மூவரும் போட்டியிட்டனர். இந்த போட்டியில் மூன்றாவது இடத்திற்கு Julie Bishop தள்ளப்பட்டார்.

Julie Bishop அவர்கள் ஆளும் லிபரல் கட்சியின் மூத்த உறுப்பினர் என்பதோடு, நாடாளுமன்ற லிபரல் கட்சியின் துணைத் தலைவராக Malcolm Turnbull அவர்களின் கீழ் பணியாற்றி வந்தார். மட்டுமல்ல, Malcolm Turnbull க்கு அடுத்தபடி மக்கள் அதிகம் விரும்பும் லிபரல் கட்சியின் தலைவராக Julie Bishop உள்ளார் என்று தொடர்ந்து வந்துகொண்டிருந்த கருத்துக் கணிப்புகளும் கூறிவந்தன. எனவே  Julie Bishop ஐ கட்சி அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கும் என்றும் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் புதிய பிரதமராக Scott Morrison தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பின்னணியில் தாம் பதவி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக Julie Bishop இன்று அறிவித்துள்ளார்.    


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now