மெல்பேர்ன் நகரின் வட பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றில், இருவர் கைது செய்யப்பட்டனர்.
இன்று மதியம் ஒன்றரை மணியளவில் Queensberry Street இலுள்ள St Mary's Anglican Churchக்கு வெளியே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு வெள்ளை நிற பிளாஸ்டிக் மேலங்கி அணியப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதை காணொளிகள் காட்டுகின்றன. கைதுசெய்யப்பட்ட மற்றையவர் பெண் என குறிப்பிடப்படுகிறது.
இந்த நடவடிக்கையால், பொது மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என காவல்துறை கூறுகிறது.
Share
