Momena Shoma எனும் 24 வயது பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்த பெண்மணி நேற்று மெல்பன் பெருநகரின் Mill Park எனுமிடத்தில் தான் தங்கியிருந்த வீட்டிலுள்ள 56 வயது மனிதரை கத்தியால் குத்தினார் என்றும், படுகாயமடைந்த அவர் தற்போது Royal Melbourne மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
இம்மாதம் முதலாம் தேதி கல்விகற்கும் Student விசாவுடன் மெல்பன் வந்த பெண்மணி Shoma, வாடகைக்கு அந்த வீட்டில் தங்கியிருந்தார் என்றும், அவர் ஐ.எஸ் எனும் இஸ்லாமிய அமைப்பின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதலை நடத்தினார் என்றும் Australian Federal Police இன் தேசிய பாதுகாப்பு பிரிவின் Acting Deputy Commissioner Ian McCartney அவர்கள் ஒரு அறிக்கைவழி கூறியுள்ளார்.
பயங்கரவதா செயலில் ஈடுபட்டார் என்ற குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இன்று Melbourne Magistrates Court இல் நீதிபதி முன் கொண்டுசெல்லப்பட்ட பெண்மணி Shoma பிணை கோரவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்மணி Shoma மீண்டும் மே மாதம் 2 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு அழைத்துசெல்லப்படுவார்.
