SKIP TO MAIN CONTENT

பயன்படாத பரிசுப் பொருட்களை என்ன செய்யலாம்?

Public domain
Source: Public Domain

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

கடந்த கிறிஸ்மஸ் புதுவருட பண்டிகைக் காலத்தில் பரிமாறப்பட்ட பரிசுகளில், 600 மில்லியன் டொலர்கள் பெறுமதியான, 20.6 மில்லியன் பரிசுப்பொருட்கள், ஒருவருக்கு தேவையற்ற பரிசாக அமைந்திருக்குமென ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

அதாவது நாட்டிலுள்ள 71 வீதமான ஆஸ்திரேலியர்கள் தமக்குத் தேவையில்லாத, ஆகக் குறைந்தது ஒரு பரிசையாவது பெற்றிருப்பார்கள் என Galaxy ஆய்வு கூறுகின்றது.

இதற்குள் நீங்களும் அடங்கக்கூடும். எனவே உங்களுக்குப் பயன்படாத அல்லது பிடிக்காத அல்லது பொருத்தமில்லாத பரிசுப் பொருட்கள் கிடைத்திருந்தால் அவற்றை என்ன செய்யலாம்? மூன்று வழிகள் இருக்கின்றன.

1.இணையத்தில் விற்பனை செய்யலாம்.

குறித்த பொருள் பற்றிய விபரங்களை அதன் அழகான புகைப்படத்துடன் Gumtree போன்ற இணையத்தளங்கள் மூலமாக விற்பனை செய்யலாம்.

2.தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கலாம்.

அந்தப் பொருட்களை தொண்டு நிறுவனங்கள் விற்பனை செய்து, அதன் மூலம் பெறப்படும் நிதியை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவார்கள்.

3. உங்களுக்குப் பயன்படாத பொருள் வீட்டில் இருந்து தூசிபிடிப்பதைப் பார்க்கிலும் அதை மீண்டும் யாருக்காவது பரிசளிக்கலாம்.

எனினும் நாட்டிலுள்ள 9.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் அவ்வாறு செய்வதற்குச் சங்கடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

ஆனால் யார் என்ன பரிசைத் தந்தார்கள் என்பதைக் குறித்து வைத்து, அந்தப் பரிசை அவர்களுக்கே மீண்டும் கொடுக்காதபடி எச்சரிக்கையாக இருப்பதுடன், ஒரே நட்பு வட்டத்திற்குள் குறித்த பரிசுப் பொருள் செல்லாதவண்ணம் பார்த்துக்கொள்வதன் மூலம் தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now