SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா நோக்கி படகில் வந்துகொண்டிருந்த 13 பேர் கைது!

file image
Source: file image

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியா நோக்கி பதின்மூன்று பேருடன் வந்துகொண்டிருந்த படகொன்று பழுதடைந்து Timor-Leste ஜொகோ தீவுக்கரையோரமாக உதவிக்காக ஒதுங்கியபோது Timor-Leste அதிகாரிகள் படகில் வந்தவர்கள் அனைவரையும் கைது செய்து கொரோனா தொற்று சோதனைக்காக தனிமைப்படுத்தியுள்ளார்கள்.

டார்வினில் உள்ள பழத்தோட்டங்களில் வேலை கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்ட 11 வியட்னாமியர்களும் அவர்களை அழைத்துவந்த இந்தோனேசிய படகோட்டிகள் இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலியா வருவதற்கு இவர்கள் ஒவ்வொருவரும் ஆட்கடத்தல்காரர்களுக்கு 22 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொடுத்திருக்கிறார்கள் என்றும் இந்தோனேசியாவின் கிழக்கு கரையோர மாநிலமொன்றிலிருந்து புறப்பட்டு பத்துநாட்கள் கடலில் பயணம் செய்தபிறகு, படகில் ஏற்பட்ட பழுதின் காரணமாக கடந்த ஜூன் 12 ஆம் திகதி பகுதியில் கரையொதுங்கியபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்றும் Timor-Leste அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டு கொரோனா தொற்று சோதனைக்காக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 13 பேரும் தொற்றுச்சோதனை நிறைவடைந்ததும் அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பபடுவர் என்று Timor-Leste அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு இந்தக்கைது குறித்து தமக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now