SKIP TO MAIN CONTENT

பெர்த்தில் இரு பிள்ளைகளைக் கொன்ற தாயார் குற்றமற்றவர் என தீர்ப்பு!

Six-year-old Tiana Djurasovic (left) and 10-year-old Mia Djurasovic, who were killed by their mother in Perth in October 2019.
Six-year-old Tiana Djurasovic (left) and 10-year-old Mia Djurasovic, who were killed by their mother in Perth in October 2019. Source: AAP

2 min read

Published


Skip to article content

பெர்த்தில் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்த தாயார் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருந்தபோதே அவர் இக்கொலைகளைச் செய்துள்ளதால், குறித்த 40 வயது தாயார் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்படுவதாக மேற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெர்த்தின் வடக்குப் பகுதியிலுள்ள வீட்டில் வசித்துவந்த Milka Djurasovic என்ற பெண், தனது 10 வயது மற்றும் 6 வயது மகள்களை கொலைசெய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.

வீட்டிலிருந்து வெளியேற முன்னர் வீடியோ ஒன்றைப் பதிவுசெய்த Milka Djurasovic, இச்சம்பவத்தையிட்டு தான் வருந்துவதாகவும் தனது வாழ்க்கையையும் முடித்துக்கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

சம்பவம் இடம்பெற்று இரு மணி நேரங்களின் பின்னர் வாகன தரிப்பிடமொன்றில் வைத்து காயங்களுடன் மீட்கப்பட்ட Milka Djurasovic மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு வழக்கு விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் Milka Djurasovic-ஐ குற்றவாளியாக கருத முடியவில்லை எனவும், மனநல கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைசெய்ய முயன்றபோதும் அது கைகூடவில்லை எனவும் விசாரணைகளின் முடிவில் நீதிபதி Stephen Hall தெரிவித்தார்.

மனநல சிகிச்சைபெற்றுவரும் Milka Djurasovic முழுமையாக குணமடையும்வரை காலவரையறையற்ற தடுப்புக்காவலில் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, the Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636. 


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now