உள்துறை அமைச்சர் Peter Dutton-க்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி Kirilly Dutton தெரிவித்துள்ளர்.
ஆஸ்திரேலியாவின் மிகுந்த சர்ச்சைக்குரிய அரசியல்புள்ளியாக உள்ள Peter Dutton 48 வயதானவர். அவர் தற்போது உயரதிகாரம் படைத்த உள்துறை அமைச்சுப்பொறுப்பை வகித்துவருபவர். இதற்கு முன்னர் குடிவரவு அமைச்சராக பதவி வகித்தவர்.
அவரது பதவி மற்றும் வேலை தொடர்பான கொலை மிரட்டல் குறித்து அவரது மனைவி மேலும் கூறும்போது - Peter Dutton பொறுப்புள்ள தகபப்பன். அவருடன் நெருங்கிப்பழகிப்பார்த்தவர்களுக்கு தெரியும். அவர் பழகுவதற்கு எவ்வளவு பண்பானவர் என்பது. உள்துறை அமைச்சு எனப்படுவது கடினமானதுதான். ஏனைய அமைச்சுக்கள்போல மென்மையான பாரம் குறைந்த அமைச்சு அல்ல என்றும் மிகவும் சிக்கலான பொறுப்பு மிக்கது என்றும் கூறியுள்ளார்.
எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ள மிரட்டல்களில் Dutton மாத்திரமல்லாமல், பிள்ளைகளினது பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கும் காயங்களை ஏற்படுத்தப்போவதாகவும் கொலை செய்யப்போவதாகவும்கூட மிரட்டல்கள் வந்திருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிறிஸ்பன் மாநிலத்தில் டிக்ஸன் தொகுதி ஆசனத்தை கடந்த 18 வருடங்களாக தக்கவைத்திருக்கும் Peter Dutton எதிர்வரும் மே 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
