SKIP TO MAIN CONTENT

அகதிகளால் வீண் ஹோட்டல் செலவு: விடுதலை செய்தமைக்கு டட்டன் கூறியுள்ள காரணம்!

Minister for Home Affairs Peter Dutton.
Minister for Home Affairs Peter Dutton Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியா  அழைத்துவரப்பட்டு சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக மெல்பேர்னிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்து விடுக்கப்பட்டுள்ள அகதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், குறிப்பிட்ட அகதிகளை ஹோட்டல்களில் வைத்து பேணுவது வீண் பணவிரயம் என்பதனாலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

2GB வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கூறும்போது - விடுவிக்கப்பட்ட அகதிகள் அனைவரும் சமூகத்துக்கு ஆபத்தற்றவர்கள் என்றும் இவர்களை எங்கேயும் திருப்பி அனுப்ப முடியாத தற்போதைய சூழ்நிலையில் ஹோட்டலில் வைத்து அரசுப்பணத்தை தொடர்ந்தும் விரயம் செய்யமுடியாது என்றும் டட்டன் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் ஆஸ்திரேலியாவை நிரந்தர வாழ்விடமாக்க முடியாது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று உள்துறை அமைச்சு விடுத்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now