SKIP TO MAIN CONTENT

இங்கிலாந்தில் பொதுமக்களுக்குக் கொடுக்கப்பட்டுவரும் கோவிட் தடுப்புமருந்து எப்படி செயல்படுகிறது, எவ்வளவு பாதுகாப்பானது?

Margaret Keenan, 90, received the Pfizer-BioNTech COVID-19 vaccine at University Hospital in Coventry, England, on 8 December.
Margaret Keenan, 90, received the Pfizer-BioNTech COVID-19 vaccine at University Hospital in Coventry, England, on 8 December. Source: AAP

3 min read

Published

Updated


Skip to article content

COVID-19 அல்லது Corona virus இற்கான தடுப்புமருந்து அடுத்தவருடம் நடுப்பகுதிக்கு முன் பயன்பாட்டுக்கு வரும் சாத்தியமில்லை என்றே சொல்லப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன் இங்கிலாந்தில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இங்கிலாந்தில் தற்போது பொதுமக்களுக்குக் கொடுக்கப்பட்டுவரும் இந்த தடுப்புமருந்து எப்படி செயல்படுகிறது, எவ்வளவு பாதுகாப்பானது?

தடுப்புமருந்து இதுவரையில்லை என்ற நிலையில், வைரஸ் பரவுவதைத் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மும்முரமாக முடுக்கிவிடப்பட்டதன் காரணமாக மேலும் பல்லாயிரக் கணக்கானோர் மரணத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

வைரஸை எதிர்த்துப் போராடும் பயிற்சியை தடுப்புமருந்து எமது உடலுக்கு வழங்கும் என்பதால், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, தடுப்புமருந்தையும் பயன்படுத்துவதன் மூலமாகவே இந்த வைரஸை முற்றாக ஒழிக்கமுடியும் என்பதே நிபுணர்களின், ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.

இந்தப்பின்னணியில் Pfizer நிறுவனம் BioNtech என்ற நிறுவனத்துடன் இணைந்து பரிசோதனை செய்துவந்த தடுப்புமருந்து பற்றிய முழுமையான phase 3 clinical trial விபரங்கள் சென்றமாதம் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த தடுப்புமருந்தை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான முழுமையான அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை.

Staff At Royal Free Hospital Simulate The Preparation Of The Pfizer Vaccine
Staff At Royal Free Hospital Simulate The Preparation Of The Pfizer Vaccine Source: Getty Images Europe

இந்த மருந்தை emergency authorisation என்ற அவசரகால அனுமதி அடிப்படையில் இங்கிலாந்தில் பயன்படுத்தும் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கிறது. அங்கு வசிக்கும் 90 வயதான Margaret Keenan என்ற பெண்மணிக்கு இம்மாதம் எட்டாந்திகதி முதன்முதலாக இந்த தடுப்புமருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து எதிர்வரும் வாரங்களில் எட்டு லட்சம் பேருக்கு இந்த தடுப்பு மருந்து அங்கே வழங்கப்படவிருக்கிறது.

Pfizer/BioNtech இந்தத் தடுப்புமருந்து 95 சதவீத ஆற்றல்( efficacy) உள்ளது என்றும் சுமார் 43000 பேர் இந்த மருந்துக்கான phase 3 clinical trials ஆய்வுகளில் பங்குபற்றினார்கள் என்பதால் அது பாதுகாப்பானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் Pfizer சொல்கிறது.

இது 21 நாள் இடைவெளியில் ஒருவருக்கு இரண்டு doses மருந்தளவுகளாக் க்கொடுக்கப்படவிருக்கின்றன. 40 மில்லியன் doses களை இங்கிலாந்து Pfizer இடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

யாருக்கு முதலில் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டதா?

ஆம். வைத்தியசாலைகளில் நோயாளிகளைக் கவனிக்கும் frontline health staff என்றவகையில் வரும் வைத்தியர்கள், தாதிமார் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் 80 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு முதலிலும் பின்னர் இந்த வரிசைப்படியும் தடுப்பு மருந்து வழங்கப்படவிருக்கிறது.

1.முதியோர் பராமரிப்பு நிலையங்களில் உள்ளோரும் அவரைப் பராமரிப்பவர்களும் 75 வயதிற்கு மேற்பட்டோரும்.

2. கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள 70 வயதிற்கு மேற்பட்டோர்.

3. 65 வயதிற்கு மேற்பட்டோர்

4. 16 இற்கும் 64 வயதிற்கும் இடைப்பட்ட serious underlying health conditions என்ற நோய்வாய்ப்பட்டவர்கள்

5. அடுத்து 60, 55, மற்றும் 50 வயதானோர் என்ற வரிசைப்படி தடுப்புமருந்து வழங்கப்படவிருக்கிறது.

Image

இந்த தடுப்புமருந்து எந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது?

இந்த தடுப்புமருந்து புதிய, RNA type ஐச் சேர்ந்ததாகும். RNA வகைத் தடுப்புமருந்து இதுவரை மனிதர்க்கு ஏற்ற அங்கீகரிக்கப்பட்டதில்லை. Clinical trials என்ற ஆய்வுகட்டங்களின் போதுமட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. -70 C என்ற கடுங்குளிர் நிலையில் இந்த தடுப்புமருந்து வைக்கப்படவேண்டும் என்பதும் மருந்துவரும் பெட்டிகள் திறக்கப்பட்டால் 5 நாட்கள் மட்டுமே சாதாரண குளிர்ச்சாதனப் பெட்டிகளில் fridge வைத்திருக்கமுடியும் என்பதும் இந்த மருந்தை விநியோகிப்பதில் உள்ள சிக்கல்களாகும்.

Pfizer இன் தடுப்புமருந்தை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு emergency authorisation அடிப்படையில் அடுத்த வாரம் தொடக்கம் வழங்குவதற்கு FDA Food and Drug Administration அனுமதி வழங்கியிருக்கிறது.

AstraZeneca மற்றும் Oxford பல்கலைக்கழகம் இணைந்து சோதனைசெய்துவரும் தடுப்புமருந்து பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. இது எந்த நிலையில் இருக்கிறது?

70 தொடக்கம் 90 சதவீத ஆற்றல் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள AstraZeneca/ Oxford University என்பன இணைந்து தயாரிக்கும் AZD1222 என்ற தடுப்புமருந்து மூன்றாம் கட்ட clinical trials களை விரைவில் பூர்த்திசெய்யவிருக்கிறது.

A heated discussion about the efficacy of the AstraZeneca vaccine, which is being prepared for the majority of Australians
A heated discussion about the efficacy of the AstraZeneca vaccine, which is being prepared for the majority of Australians Source: AAP

இது அடுத்தவருடம் மார்ச் மாதம் விநியோகத்திற்கு தயாராகிவிடும் என்ற நிலையில் பிரிட்டன் 100 மில்லியன் doses களை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவும் இந்த தடுப்புமருந்துக்காகவே காத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மெல்பர்னில் உள்ள CSL நிறுவனம் இந்த மருந்தை உற்பத்தி செய்கிறது.

இது விநியோகத்திற்கும் பயன்பாட்டுக்கும் இலகுவான மருந்தாகும். சாதாரண குளிர்ச்சாதனப்பெட்டியில் உள்ள வெப்பநிலையில் இதை இடத்துக்கிடம் கொண்டுசெல்லவும் store செய்யவும் முடியும். அத்தோடு இது Pfizer தடுப்பு மருந்தைவிட இது மலிவானதாகும்.

சாதாரண சளிச்சுரத்ததை ஏற்படுத்தும் adenovirus என்ற வைரஸின் பலவீனப்படுத்தப்பட்ட version மூலமாகவே இது உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இதன்மூலமாக covid 19 இற்கு எதிரான நோயெதிர்ப்புச்சக்தி உடலில் ஏற்படுகிறது. குறிப்பாக முதியோருக்கு இது பலனளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஒருவருக்கு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு doses கொடுக்கப்பட வேண்டும்.ஆஸ்திரேலியா சுமார் 4 மில்லியன் doses களை AstraZeneca நிறுவனத்திடமிருந்து வாங்கவிருக்கிறது.

இதைத்தவிர விரைவில் பயன்பாட்டுக்கு வரக்கூடிய ஏனைய தடுப்புமருந்துகள் எவை?

அடுத்து Moderna நிறுவனம் தயாரிக்கும் தடுப்புமருந்து 94 சதவீத ஆற்றல் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இதுவும் இரண்டுவார இடைவெளியில் இரண்டு doses களாக வழங்கப்படவேண்டும். இந்த மருந்தின் clinical trials இல் 30000 பேர் பங்குபற்றியிருக்கிறார்கள். அடுத்த வருடம் நடுப்பகுதியில் இது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் ஏற்கனவே 5மில்லியன் doses களுக்கு order செய்திருக்கிறது. இந்த தடுப்புமருந்து Pfizer இன் தடுப்பு மருந்தை விட விநியோகிப்பதற்கு சற்று இலகுவானதாகும். -20 C உஷ்ணநிலையில் இதை 6 மாதம்வரை வைத்திருக்கமுடியும்.

Authorisation requests in the US and Europe to come after results confirm a efficacy rate estimated at 94.1 percent.
Authorisation requests in the US and Europe to come after results confirm a efficacy rate estimated at 94.1 per cent. Source: Getty

இவற்றைத்தவிர ரஷ்யாவின் Sputnik V, பிரிட்டனின் Jansen இன் தடுப்பு மருந்து, சீனாவின் Wuhan Institute ஆய்வுசெய்துவரும் தடுப்புமருந்து என்பவற்றின் phase 3 clinical trials முடிவடையும் நிலையில் இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்த அளவில் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகம் சோதனை செய்துவந்த தடுப்புமருந்து கைவிடப்பட்டுள்ளது. இந்த சோதனைக்காக HIV வைரஸின் பலவீனப்படுத்தப்பட்ட பகுதிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இந்த மருந்தை ஏற்றிக்கொண்டவர்களுக்கு HIV false positive என்ற தவறான ஆய்வு முடிவுகள் வந்ததால் இது கைவிடப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் Pfizer இன் தடுப்புமருந்தும் AstraZeneca/Oxford இன் தடுப்புமருந்தும்

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏறக்குறைய தயாராகிவிட்டன என்றே சொல்லவேண்டும்.

தடுப்புமருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக சந்தைக்கு வருகிறது என்ற செய்தி நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் தடுப்பு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி இந்த நோயை வெற்றிகொள்ளமுடியாது. சர்வதேசரீதியாக எல்லோருக்கும் உடனடியாக தடுப்புமருந்து கிடைக்கும் நிலை இப்போது இல்லை என்ற நிலையில் நோய்பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து பல மட்டங்களிலும் முடுக்கிவிடப்படவேண்டும்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now