SKIP TO MAIN CONTENT

Pizza Hut பணியிடச் சட்டங்களை மீறியமை கண்டறியப்பட்டதாக Fair Work தெரிவிப்பு!

A Pizza Hut restaurant
File image (AAP) Source: AP

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

நாடு முழுவதுமுள்ள பல Pizza Hut-களில் delivery drivers-ஆக வேலை செய்தவர்களுக்கு குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளதாக Fair Work Ombudsman கண்டறிந்துள்ளார்.

Fair Work Ombudsman-ஆல் விசாரணைக்குட்படுத்தப்பட்ட 34 Pizza Hut-களில் 24 இடங்களில் பணியிடச் சட்டங்கள் மீறப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் delivery drivers-க்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தில் 12,086 டொலர்கள் குறைவாகவே கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சிட்னி மற்றும் குயின்ஸ்லாந்தில் உள்ள 3 இடங்களில் ஒவ்வொரு விநியோகத்திற்கும் ஊதியம் அதாவது "per delivery" என்ற அடிப்படையில் 5.70 டொலர்கள்கூட ஊதியமாக கொடுக்கப்ட்டுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் Fair Work Ombudsman Natalie James  தெரிவித்துள்ளார்.

இவ்வாறு Pizza Hut உரிமையாளர்களால் சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட 170 பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் 24 வயதுக்கு குறைந்தவர்கள் என்பது கவலையளிப்பதாக Natalie James  கூறியுள்ளார்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now