ஆஸ்திரேலியாவில் இருப்பவர்கள் தமது மணத்துணை மற்றும் குடும்ப அங்கத்தவர்களை வரவழைப்பதற்கான விசா விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யும் முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்படி எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் மணத்துணையை வரவழைப்பதற்கான Partner and Prospective Marriage subclass 820, 801, 309, 100 & 300 விண்ணப்பங்கள் அனைத்தும் ImmiAccount எனப்படும் இணையவழி கணக்கூடாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நேரடியாகச் சென்றோ அல்லது பேப்பர் படிவங்கள் மூலமோ விண்ணப்பிக்க முடியாது.
அதேபோல் குறித்த விசாக்களுக்கான விண்ணப்பத்தொகையையும் ImmiAccount ஊடாகவே செலுத்த வேண்டும்.
இதேவேளை Other Family Visa பிரிவுக்குள் அடங்கும் கீழ்க்காணும் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமது விண்ணப்பங்களை தபால்/courier மூலம் பேர்த்திலுள்ள விசா மற்றும் குடியுரிமை காரியாலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- Carer (subclass 116 and 836) visas,
- Remaining Relative (subclass 115 and 835) visas,
- Aged Dependent Relative (subclass 117 and 838) visas
இதற்கான கட்டணங்களை ImmiAccount ஊடாக செலுத்தலாம் என்ற போதிலும் விசா விண்ணப்பங்களை இணையமூடாக சமர்ப்பிக்க முடியாது.
அதேபோல் subclasses 103, 804, 173, 143, 884, 864 ஆகிய பிரிவுகளில் பெற்றோர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களும் தமது விண்ணப்பங்களை தபால்/courier மூலம் பேர்த்திலுள்ள விசா மற்றும் குடியுரிமை காரியாலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.