கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் புலமைப்பித்தன் அவர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
சற்று நேரத்திற்கு முன்பு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவருக்கு வயது 86.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பல பாடல்களை எழுதியுள்ள கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள், MGR ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டிருந்தார்.
நான்கு முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெற்ற இவர், நூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்களை இயற்றியுள்ளார். கடைசியாக விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் ஒரு பாடலை எழுதி இருந்தார்.