பங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் சிட்னியில் கைது செய்யப்பட்டு ஒரு மாதகாலம் விசாரிக்கப்பட்டு பின்னர் குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டு விடுதலையான இலங்கை இளைஞர் நிஸாம்டீன் தனிப்பட்ட பழிவாங்கலுக்காக திட்டமிட்டு மாட்டிவிடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாக நியுசவுத் வேல்ஸ் பொலீஸார் அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து எடுக்கப்பட்ட நோட் புத்தகத்தின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
அந்த நோட் புத்தகத்திலுள்ள எழுத்துக்கள் இலங்கை இளைஞரது கையெழுத்துக்கள் அல்ல என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின்னர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் உஸ்மான் கவுஜாவின் சகோதரர் Arsalan Khawaja விசாரிக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னர் மேற்கொண்ட ஒட்டுமொத்த விசாரணைகளையடுத்து, இலங்கை இளைஞர் நிஸாம்டீன் பயங்கரவாத குற்றச்சாட்டில் போலியாக சோடிக்கப்பட்டு சிக்கவைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக நியுசவுத் வேல்ஸ் பொலீஸார் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் உஸ்மான் கவுஜாவின் சகோதரர் Arsalan Khawaja மேலதிக விசாரணைகளுக்காக இன்றுகாலை பொலிஸாரினால் பரமட்டா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெண் விவகாரமொன்றில் ஒன்றின்பேரிலேயே நிஸாம்டீன் பொய்யாக மாட்டிவிடப்பட்டதாக நம்பப்படுகிறது.
Share
