SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் $10,000 பெறுமதியான தபால் பொதிகளைத் திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது!

Parcel
Source: Facebook

1 min read

Published


Skip to article content

மெல்பேர்னில் இணையவழி கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களடங்கிய தபால் பொதிகளைத் திருடிய இலங்கையர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

விக்டோரிய பொலிஸாரும் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட விசாரணை நடவடிக்கையில் இத்திருட்டு அம்பலமாகியுள்ளது.

Mornington Peninsula பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் குறித்த தபால் பொதிகள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Designer shoes, children’s toys, power tools, kitchen appliances, fitness equipment, homewares, cosmetics, computer accessories, high-end liquor, personalised gifts, electronic devices என பல்வேறுவிதமான பொருட்கள் அடங்கிய, சுமார் 10 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான பொதிகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

குறித்த திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபர் என்று சந்தேகிக்கப்படுபவரின் Mount Waverley வசிப்பிடத்தை கடந்த அக்டோபர் 21ம் திகதி சோதனையிட்ட பொலிஸார் திருடப்பட்ட 67 பொதிகளை மீட்டுள்ளனர்.

24 வயதான அந்நபர் கைதுசெய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு அவர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த பொருட்களை கொள்வனவு செய்தவர்களிடம் அவற்றைச் சேர்ப்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விக்டோரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now