SKIP TO MAIN CONTENT

Frozen மாதுளம்பழங்கள் வாங்கினீர்களா? நோய்த்தொற்று எச்சரிக்கை!

The cases have been linked to imported frozen pomegranate products.
Los casos están ligados sólo a los productos importados. Source: Getty

1 min read

Published

Updated



Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள Coles பல்பொருள் அங்காடியில் விற்பனையான, இறக்குமதி செய்யப்பட்ட frozen மாதுளம்பழங்களால் 7 பேருக்கு Hepatitis A தொற்று ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

சிட்னி, Wollongong மற்றும் Central Coast பகுதியைச் சேர்ந்த நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனைகளில் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, Coles பல்பொருள் அங்காடியிலிருந்து எவராவது frozen மாதுளம்பழங்களை வாங்கியிருந்தால் அவற்றை உண்ண வேண்டாம் என நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

வாந்தி, காய்ச்சல், தோல் மஞ்சள் நிறமாதல் போன்றவை இந்நோய்த்தொற்றின் அறிகுறிகளாக காணப்படும் அதேநேரம், இவ்வறிகுறிகள் ஏற்படுவதற்கு 15-50 நாட்கள் வரை செல்லலாம் என நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறையின் Dr Vicky Sheppeard தெரிவித்தார்.

இதேவேளை, ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாதுளம்பழங்களால் எவ்வித பாதிப்புமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now