SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் விபத்து: சடலங்களை படமெடுத்துக்கொண்டு ஓடிய Porsche ஓட்டுனர் கடும் சிக்கலில்!

Richard Pusey, the driver of a Porsche who allegedly fled the scene of a truck crash on Melbourne's Eastern Freeway which killed four police officers.
Richard Pusey, the driver of a Porsche who allegedly fled the scene of a truck crash on Melbourne's Eastern Freeway which killed four police officers. Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

மெல்பேர்னில் நான்கு பொலீஸாரின் உயிர்களை பலியெடுத்த விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள Porsche ஓட்டுனருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டால் பத்து வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனையை பெற்றுக்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற அன்று அதிவேகமாக தனது Porsche வாகனத்தை ஓட்டிச்சென்ற காரணத்திற்காக பொலீஸாரினால் மறித்து சோதனை செய்யப்பட்டபோது அவ்வழியாக வந்த truck ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து இடம்பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட நபர் அந்த இடத்தில் பலியான பொலீஸாரின் சடலங்களை புகைப்படமெடுத்து அவற்றை தனது முகநூலில் பதிவேற்றியிருக்கிறார் என குறிப்பிடப்படுகிறது.

சுமார் 100 km/h வேகத்தில் வந்து மோதியதால் அடித்து தூக்கியெறியப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தரின் சடலம் Porsche வாகனத்திற்கு மேல் போய் விழுந்துள்ளது. ஏனையவர்களின் சடங்லங்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கின்றன.

ஆனால், வேகமாக வந்த காரணத்திற்காக பொலீஸாரினால் மறிக்கப்பட்ட Porsche ஓட்டுனர் தெருவோரத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த காரணத்தினால் இந்தக்கோர சம்பவத்தில் எந்தக்காயமுமின்றி தப்பியிருக்கிறார் என்று 7news தெரிவித்துள்ளது.

இதேவேளை சம்பவத்தில் தப்பியவர் பொலீஸார் மீது truck மோதி ரத்தக்களரியை ஏற்படுத்தியபோது, அந்த இடத்தில் நின்று எந்த உதவியையும் மேற்கொள்ளாமல் - அந்தக்கோரத்தை படமெடுத்துக்கொண்டு - அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார் எனவும் பின்னர் அந்தப்படங்களை முகநூலில் பதிவேற்றியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இவை அனைத்தும் கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்று குறிப்பிட்டுள்ள பொலீஸார் கீழ்க்காணும் பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  1. Reckless conduct endangering life
  2. Speeding
  3. Failing to remain after a drug test
  4. Failing to render assistance
  5. Failing to exchange details
  6. Possessing a drug of dependence
  7. Destruction of evidence
  8. Three counts of committing an indictable offence while on bail 

வேறொரு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த  குறிப்பிட்ட நபரினது குரூரமான நடத்தைகள் குறித்து விரிவாக குறிப்பிடவுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த Porsche ஓட்டுனர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now