SKIP TO MAIN CONTENT

இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் சிறப்பு விசா குறித்த விவரம்

ஆஸ்திரேலியா - இந்தியா நாடுகளுக்கிடையே கடந்த வாரம் கையெழுத்தான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் (Australia India Economic Cooperation and Trade Agreement) இருநாடுகளும் Post Study Work Visa எனப்படும் கல்வி கற்றபின் தொடர்ந்து நாட்டில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் விசாக்களை வழங்க ஒத்துக்கொண்டுள்ளன.

Indian woman in the city of Sydney downtown
Indian woman in Sydney city streets take a walk and listening to music on mobile phone. Source: E+

2 min read

Published

By Raysel


Skip to article content

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் ஒரு இந்திய மாணவர் Diploma அல்லது Trade தொடர்பான கல்வி கற்று முடித்தபின் ஒன்றரை ஆண்டுகள்வரை (18 மாதங்கள்) நாட்டில் தொடர்ந்து தங்கியிருந்து வேலை செய்யவும், Bachelor Degree கல்வி கற்று முடித்தபின் இரண்டு ஆண்டுகள்வரை நாட்டில் தொடர்ந்து தங்கியிருந்து வேலை செய்யவும், Master’s Degree கல்வி கற்று முடித்தபின் மூன்று ஆண்டுகள்வரை நாட்டில் தொடர்ந்து தங்கியிருந்து வேலை செய்யவும், Doctoral Degree  கல்வி கற்று முடித்தபின் அவர்கள் நான்கு ஆண்டுகள்வரை நாட்டில் தொடர்ந்து தங்கியிருந்து வேலை செய்யவும் இந்த புதிய விசா திட்டம் அனுமதிக்கிறது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், தகவல் மற்றும் தொடர்பு துறை வல்லுனர்களின் தேவையை ஆஸ்திரேலியா அதிகம் உணர்ந்துள்ளதாக கூறியுள்ளது. எனவே STEM (science, technology, engineering, and mathematics) என்று அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகளிலும் Information and Communications எனும் தகவல் மற்றும் தொடர்பு துறையிலும் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்து Bachelor Degree கல்வி கற்று முடித்தபின் அவர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள்வரை நாட்டில் தொடர்ந்து தங்கியிருந்து வேலை செய்யவும் ஆஸ்திரேலியா இணங்கியுள்ளது.

இதுபோன்று ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு இந்தியாவில் கல்வி கற்று முடித்தபின் இதே அளவு காலங்கள் தங்கியிருந்து பணியாற்ற இந்தியாவும் விசா வழங்க ஒத்துக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இந்தியா நாடுகளுக்கிடையே கடந்த வாரம் கையெழுத்தான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்  (Australia India Economic Cooperation and Trade Agreement) நடைமுறைக்கு வந்த ஓராண்டுக்குள் Post study work visa எனப்படும் கல்வி கற்றபின் தொடர்ந்து நாட்டில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் விசா வழங்குதல் துவங்கும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now