SKIP TO MAIN CONTENT

வழுக்கை மற்றும் முடி உதிர்வதைத் தடுக்க புதிய மருந்து?

A study identifies that a possible cure for baldness may be found in a drug used to treat osteoporosis.
A study identifies that a possible cure for baldness may be found in a drug used to treat osteoporosis. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

Osteoporosis எனப்படும் என்புமுறிவு நோய்க்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்று முடி உதிர்தலைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Cyclosporine A என்ற  மருந்தின் பக்கவிளைவாக சுரக்கப்படும் பதார்த்தமொன்று, தலைமுடி நீண்டு வளர்வதை தடுக்கும் ஒருவித புரதம் மீது தாக்கத்தைச் செலுத்தி வழுக்கை விழுவதைத் தடுப்பதுடன் முடி செழித்து வளர உதவுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

University of Manchester-ஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தநிலையில், முடி உதிர்வு பிரச்சனையால் தவிப்பவர்களுக்கு இப்புதிய மருந்து நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனினும் குறித்த மருந்து பாதுகாப்பானதா என்பதை அறிந்துகொள்வதற்கு மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now