ஆஸ்திரேலியாவின் Powerball jackpot சீட்டிழுப்பில் 50 மில்லியன் டொலர்களை வென்ற அதிஷ்டசாலியை The Lott நிறுவனம் தேடுகிறது.
குறிப்பிட்ட வெற்றியாளர் சிட்னியின் கிழக்குப் பகுதியில் தனது அதிஷ்டலாபச் சீட்டினை கொள்வனவு செய்திருந்ததாகவும், தனது தொடர்பு விவரத்தை பதிவு செய்யாத காரணத்தினால் அவரை தங்களால் தொடர்புகொண்டு வெற்றிச்செய்தியை அறிவிக்கமுடியாதுள்ளதாகவும் The Lott நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற சீட்டிழுப்பில் ஒருவர் மாத்திரமே முழுத்தொகையையும் வெற்றிகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிபெற்ற இலக்கம் 6, 16, 18, 29, 30, 33, 35 Powerball 4 ஆகும்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்றைய சீட்டிழுப்பிற்கான அதிஷ்டலாபச்சீட்டுக்களை வாங்கியவர்கள் தமது இலக்கத்தைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.
