ஆஸ்திரேலியாவுக்கான சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட நாள்முதல், குறிப்பிட்ட பயணியொருவர் தனக்கு கோவிட் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டுமென்ற கட்டாய நடைமுறை பேணப்பட்டுவந்தது.
பின்னர் Antigen சோதனையையும் முதன்மை சோதனையாக ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டதையடுத்து, பயணியொருவர் ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு 24 மணித்தியாலங்களுக்குள், Antigen சோதனையை மேற்கொண்டு தனக்கு கோவிட் இல்லையென்பதை நிரூபிக்கலாம் என்ற நடைமுறை கடந்த ஜனவரி 23 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தப்பின்னணியில், Pre-departure COVID test- விமானப் பயணத்திற்கு முன்னர் கோவிட் சோதனை மேற்கொள்ளவேண்டும் என்ற கட்டாய நடைமுறை, இன்று 18ம் திகதி முதல் கைவிடப்படுகிறது.
ஆனால் பயணிகள் அனைவரும் கோவிட் தடுப்பூசியை முழுமையாக போட்டிருக்க வேண்டும், விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
ஆஸ்திரேலியா எட்டும் மற்றுமொரு மைல்கல்லாக இது அமையும் என்பதுடன், பயணிகளுக்கும் இது மிகப்பெரும் நன்மையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
