அழிவை எதிகொள்ளும் டிஜிட்டல் பொருட்களின் பட்டியல்
மனித சமூகத்தில், அழிவின் விளிம்பில் அல்லது ஆபத்தில் இருக்கும் டிஜிட்டல் பொருட்களைப் பாதுகாக்கும் நோக்கில், DPCயின் 'Bit List' என்ற பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இந்த பட்டியலைத் தொகுத்து மற்றும் பராமரிப்பதன் மூலம், டிஜிட்டல் பொருட்களைப் பாதுகாக்கும் முனைப்பில் முயற்சிகளை மேற்கொள்வதுதான் DPCயின் நோக்கம். ஒரு டிஜிட்டல் பொருள், எவ்வளவு சீக்கிரம் அழிவை சந்திக்கக்கூடும் என்பதன் அடிப்படையில், இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. பல தொழில்நுட்ப வார்த்தைகளை, வாசகர்களும் நேயர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலத்திலேயே தருகிறோம். நிறுவனங்களின் பெயர்களையோ, காப்புரிமை பெற்ற செயலிகளின் பெயர்களையோ தாம் தமிழில் மொழிமாற்றம் செய்யவில்லை.
பாதிக்கப்படக்கூடியவை
பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப சவால்கள் குறைவாக இருந்தாலும் அவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்ற புரிந்துணர்வு இல்லாத பட்சத்தில், அல்லது இவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேவைகளை அவற்றிற்குப் பொறுப்பான முகவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்றால், பாதிக்கப்படக்கூடிவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வகைப்பாட்டில், மோசமான சூழ்நிலைகளிலும் அதிக பாதிப்புக்குள்ளாகாத பொருள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சில உதாரணங்கள்:
இணைய அடிப்படையிலான தற்போதைய சமூக ஊடக தளங்கள் அல்லது அவற்றைப்போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்ட பொருட்கள்;
- Facebook இடுகைகள்;
- Twitter;
- WhatsApp செய்திகள்;
- SnapChat செய்திகள்;
- Slack Channels;
- இணையத்தள அரசியல் பிரச்சாரங்கள்;
- வலைப்பூங்காக்களில் பதிவுகள் மற்றும் கருத்துகள்;
- இணையத்தள விவாத மேடைகள்;
- இணையத்தள சமூகங்கள்.
அருகிவருபவை
பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப சவால்கள் அதிகமாக இருக்கின்ற அல்லது அவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்ற புரிந்துணர்வு குறைவாக இருக்கும் பட்சத்தில், அல்லது இவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேவைகளை அவற்றிற்குப் பொறுப்பான முகவர்கள் பூர்த்தி செய்ய தயாரில்லை என்றால், அருகிவருபவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வகைப்பாட்டில், மோசமான சூழ்நிலைகளில் அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடிய பொருள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சில உதாரணங்கள்:
- சமூக டிஜிட்டலில் பகிரப்பட்ட டிஜிட்டல் புகைப்படங்கள் மற்றும் வீடியோ அல்லது Cloud serverகளில் பதிவேற்றப்பட்டவை;
- Flickr;
- Vimeo;
- YouTube;
- Instagram;
- Periscope;
- DropBox;
- Facebook;
- பிணைய இயக்கி (Network Drive) களில் நீண்ட நாட்கள் சேமித்த ஆவணங்கள்,
- Intranets மற்றும் Document Systems,
- டிஜிட்டல் சட்ட பதிவுகள் மற்றும் சான்றுகள்,
- டிஜிட்டல் இசை உற்பத்தி மற்றும் பகிர்வு,
- டிஜிட்டல் வானொலி பதிவுகள்,
- கவனிக்காமல் விடப்பட்ட பொருட்கள்:
- பதிப்புரிமை கண்டுபிடிக்க முடியாதவை,
- வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள்,
- உள்ளூராட்சி அல்லது வேறு அரசு நிறுவனங்களிலுள்ள நீண்ட காலப் பதிவுகள்.
ஆபத்தானவை
பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளும், அல்லது இவற்றைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பானவர்கள் யாரும் இல்லாத போது, அல்லது அவற்றிற்குப் பொறுப்பான முகவர்கள் இவற்றைப் பாதுகாக்க முடியாத நிலையில் உள்ளார்கள் என்றால், ஆபத்தானவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வகைப்பாட்டில், மோசமான சூழ்நிலைகளில் ஆபத்தை சந்திக்கூடிய பொருள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சில உதாரணங்கள்:
- Born Digital Images Held Offline on Portable Storage Devices,
- Community Archives and Community Generated Content,
- Magnetic Portable Mediaவில் சேமிக்கப்பட்டவை [Amstrad PCW Disks, MiniDV, ZipDisks, floppy disks (3.5, 5.25, 8), reel-based magnetic tape, Older LTO (especially LTO1-6), Digital Linear Tape, AIT, Digital8, Compact Cassette data tapes, DDS/DAT tapes],
- பழைய Portable Mediaவில் சேமிக்கப்பட்டவை (Non-Magnetic) [such as Flash Drives, USB sticks, CD; DVD, LaserDisc, Magneto-Optical Disc, MiniDisc, GD ROM, Mini-DVD, UMD, EVD, BluRay, HDDVD, HVD, Memory Cards, SD, Micro-SD],
- குடும்ப அல்லது தனிப்பட்ட பதிவுகள்
- குழந்தைப் பருவ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்,
- பள்ளி அல்லது பட்டப்படிப்பு புகைப்படங்கள்,
- திருமணப்படங்கள் மற்றும் காணொளிகள்
- மின்னணு கடிதங்கள் (மின்னஞ்சல், messenger, WhatsApp)
நடைமுறையில் அழிந்துபோனவை
சாதாரண முறையில் பெறமுடியாத எண்ம பொருட்கள் என்றால், நடைமுறையில் அழிந்துபோனவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வகைப்பாட்டில், கடுமையான அழிவுகரமான சூழ்நிலைகளில் ஆபத்தை சந்திக்கும் பொருள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சில உதாரணங்கள்:
- Pre-WWW Videotex Data Services and Bulletin Board Services,
- Pre-WWW ViewData and TeleText Services where no archival agency has captured and retained the signal.
அக்கறை காட்டவேண்டியவை
DPC உறுப்பினர் யாராவது ஒரு எண்ம பொருள் அழியும் ஆபத்திலிருக்கிறது என்று கரிசனை வெளியிட்டால், அது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும்வரை அக்கறை காட்டவேண்டியவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வகைப்பாட்டில் உள்ளவை, இந்த வருடம் நவம்பர் இறுதிக்குள் மதிப்பீடு செய்யப்படும்.
சில உதாரணங்கள்:
- PDF,
- Flash கொண்ட இணையதளங்கள்,
- மின்னஞ்சல் சேவைகள்,
- பாவனையில் இல்லாத அல்லது பாவனை குறைந்த சமூகத்தளங்களில் பதியப்பட்டவை,
- GeoMagnetic தரவுகள்,
- தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட எண்ம பொருட்கள்,
- ஓய்வூதியம், அடமானம் மற்றும் காப்பீட்டு பதிவுகள், மருத்துவ பதிவேடுகள்,
- கட்டடக்கலை மற்றும் பொறியியல் தரவுகள்
ஆபத்து குறைந்தவை
பட்டியலில், மற்றைய வகைகளில் சேர்க்க முடியாதவை ஆனால் ஒரு தனித்துவமான பாதுகாப்பிற்கான தேவை இருப்பதாகக் கணிக்கப்பட்ட டிஜிட்டல் பொருட்கள், ஆபத்துக் குறைந்தவை என பட்டியலிடப்பட்டுள்ளது.
- இந்த வருடம், இந்த வகையில் எந்த பொருளும் இல்லை.
