SKIP TO MAIN CONTENT

"அகதிகளின் வலியை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்" - அகதிகளின் ஆர்வலர்

Biloela நகர் நேற்று விழாக்கோலம் கொண்டிருந்தது. 2018ஆம் ஆண்டு நாடுக்கடத்தப்படுவதற்காக பலவந்தமாக குடிவரவு அதிகாரிகளால் கொண்டுசெல்லப்பட்ட பிரியா நடேஸ் குடும்பம் சுமார் நான்கு வருட போராட்டத்திற்கு பிறகு நேற்று Biloela சென்றடைந்தனர்.

Murugappan Family Returns To Biloela After Four Years In Immigration Detention
Nades Murugappan and Priya Murugappan embrace supporters after their arrival in Biloela on June 10, 2022 in Biloela Source: Dan Peled/Getty Images

3 min read

Published

Updated

By Selvi


Skip to article content

Biloela எனும் நகர் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் மத்திய பகுதியில் சுமார் 6,000 மக்கள்தொகை கொண்ட சிறிய நகரமாகும். Biloela என்ற பெயர் காக்கடடூ (Cockatoo) பூர்வீககுடி வார்த்தையிலிருந்து வந்ததாக பொதுவாக நம்பப்படுகிறது. Biloela சிறிய நகரமாக இருக்கும் போதும் பள்ளிக்கூடம், மருத்துவம், வர்த்தக கடைகள் என அத்தியாவசிய விடயங்கள் அனைத்தும் அங்கு காணப்படுவதுடன் ஒரு சிறிய கலைக்கூடமும் உள்ளது.

Priya Nades family returns to Biloela
Source: SBS Tamil

பிரியா மற்றும் நடேசலிங்கம் அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகளான கோபிகா மற்றும் தருணிக்கா இருவருடன் பல ஆண்டுகளாக Biloelaவில் வசித்து வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அவர்களின் bridging visa காலாவதி ஆகிய நிலையில் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்காக பலவந்தமாக குடிவரவு அதிகாரிகளால் கொண்டுசெல்லப்பட்டனர்.

சுமார் நான்கு வருட தடுப்பு காவல் மற்றும் சட்ட போராட்டத்திற்கு பின் நேற்று பிரியா நடேஸ் குடும்பம் நேற்று Biloela திரும்பினர். தங்களின் புதிய வாழ்க்கையை மிகவும் ஆவலோடு மகிழ்ச்சியோடு ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாக நேற்று நடந்த ஊடகச்சந்திப்பில் பிரியா நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் கூறினார்.

இதேவேளை பிரியா நடேஸ் குடுபத்திற்கு Biloela சமூக மக்கள் அன்று முதல் இன்று வரை பெரும் ஆதரவு வழங்கி வருகின்றனர். இவர்களை மீண்டும் அழைத்து வர தொடர்ச்சியாகப் போராடிய Home to Bilo எனும் அமைப்பின் அங்கத்தவர்கள் இந்த குடும்பத்தை கட்டி அணைத்து முத்தமிட்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பிரியா நடேஸ் குடும்பம் சமூக மக்களின் ஆதரவு மற்றும் அவர்களுக்காக தொடர்ச்சியாக போராடும் ஆதரவையும் எவ்வாறு பெற்றனர்

மனிதநேயத்துடன் வாழும் மனிதராக எம்மால் அவர்களின் வலியை புரிந்துக்கொள்ள முடிந்தது என்கிறார் Kathryn O'Neill அவர்கள். பிரியா நடேஸ் குடும்பத்தை நேற்று Biloelaவில் வரவேற்பதற்காக பிரிஸ்பனிலிருந்து Biloela வந்துள்ள Kathryn O'Neill கிருஸ்துவ மத போதகராக கடமையாற்றியிருந்த Sisters of Mercy churchஐ சேர்ந்தவர். தனக்கு பிரியாவின் அறிமுகம் கிடைத்தது ஒரு தற்செயலான சம்பவம் என்று Kathryn O'Neill SBS Tamilயிடம் உரையாட அராம்பித்தார்.

Kathryn O'Neill
Activist Kathryn O'Neill at Bioela Source: SBS Tamil

மேற்கு ஆஸ்திரேலியாவில் பூர்வீககுடி மக்களுடன் தான் பணியாற்றிவந்த நிலையில் பிரிஸ்பன் நகருக்கு தனது பெற்றோருக்காக திரும்ப வேண்டியிருந்ததாகவும் பிரிஸ்பனில் வசித்துக்கொண்டு பூர்வீககுடி மக்களுக்காக பணியாற்ற முடியாமல் இருந்ததினால் அகதிகளுக்காக பணியாற்றும் தன்னார்வ தொடர்களுடன் பணியாற்ற ஆரம்பித்த நிலையில் ஒரு நாள் பிரியாவின் அறிமுகம்  தொலைபேசி வழியாக கிடைத்ததாக Kathryn O'Neill கூறினார்.

பிரியா நடேஸ் குடும்பத்தின் கதையை கேட்டவுடன் அவர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதை தான் உணர்ந்து கவலை அடைந்ததாக கண்ணீர் மல்க Kathryn O'Neill கூறினார்

ஆஸ்திரேலியா அரசியல் கொள்கை சிலவற்றில் இனவெறி காணப்படுவதாக Kathryn O'Neill கூறுகிறார்

"நமது நாட்டில் சிலரிடம் அகதிகள் குறித்து பிழையான புரிதல் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன் . அவர்களிடம் நான் அகதிகள் அனுபவிக்கும் இன்னல்களை கூற முயன்றாலும் அவர்கள் செவிமடுக்க விரும்புவதில்லை. சிலரோ அகதிகளுக்காக அனுதாபம் கொண்டிருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுக்க முன்வருவதில்லை" என்றும் தனது உணர்வை SBS Tamilயிடம் Kathryn O'Neill பகிர்ந்துக்கொண்டார்.

இன்று மாலை Biloelaவில் பிரியா நடேஸ் குடும்பத்தினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும் பல்லின பல்கலாச்சார Flourish விழா துவங்கியுள்ளது.

Murugappan Family Returns To Biloela After Four Years In Immigration Detention
Kopika, Priya ,Tharnicaa and Nades Murugappan at Flourish festival on June 11, 2022 in Biloela Source: Dan Peled/Getty Images

இந்த விழாவில் கலந்துகொள்ள மேடைக்கு சென்றுள்ளது பிரியா நடேஸ் குடும்பம். பிரியா நடேஸ் குடும்பத்தின் நிரந்தரக் குடியுரிமைக்கான முயற்சிக்கு 'எந்த தடையும் இல்லை' என்று பிரதமர் Anthony Albanese கூறியிருப்பதாக ABC செய்தி வெளியிட்டுள்ளது. அதே வேளையில் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் சட்டவிரோதமாக படகுகளில் வரும் எவரையும் தாம் நாட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றும், அப்படியான படகுகள் தொடர்ந்து ம், முன்புபோன்றே திருப்பி அனுப்பப்படும்  என்றும் புதிதாக பதவியேற்ற லேபர்கட்சி அரசு கூறிவருகிறது. அப்படியான படகு ஒன்றை அரசு இந்த வாரமும்  இலங்கைக்கு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ளஎமது 

tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

  


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now