ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இணைய வழி சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இரண்டு நாடுகளும் கொரோனா தொற்றுக்காலத்தில் முகங்கொடுத்த சவால்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசவுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் பாதுகாப்பு, தொழில்நுட்பம், கடற்பாதுகாப்பு ஆகிய துறைகளிலுள்ள புதிய வாய்ப்புக்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேசுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது மதிய உணவுக்கு மாங்காய் சட்னியுடன் சமோசாக்களை தயாரித்திருந்த ஸ்கொட் மொறிஸன் 'ScoMosas' என அதை அழைத்து, இந்தியப்பிரதமர் மோடியுடன் அவற்றை பகிர்ந்துகொள்ளமுடியாதமை கவலையளிப்பதாக கூறியிருந்தார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள மோடி, கொரோனா அச்சம் நீங்கிய பின்னர் மொறிஸனை சந்திக்கும்போது அவரோடு சமோசாவை பகிர்ந்துகொள்ள ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
