பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் இன்று காலமானார். அவருக்கு வயது 99.
பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் இளவரசர் பிலிப் ஆவார்.
உடல்நலக்குறைவு காரணமாக சுமார் ஒரு மாதகாலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த இளவரசர் அண்மையில் அரண்மனை திரும்பியிருந்தார்.
இளவரசரின் மரணச்செய்தியை Buckingham அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. அவரது மறைவு தொடர்பாக Buckingham அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இளவரசரின் உயிர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் அவர்கள் மகாராணி ஆவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 1947ஆம் ஆண்டில் அவரை இளவரசர் பிலிப் திருமணம் செய்து கொண்டார்.
எதிர்வரும் ஜுன் 10ம் திகதி இளவரசர் பிலிப் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
