பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவுக்கு சென்று ஆஸ்திரேலியாவுக்கு திரும்பமுடியாமலிருக்கும் ஒரு தொகுதியினரை ஏற்றிக்கொண்டு நாளை பத்தாம் திகதி விசேட விமானம் புதுடில்லியிலிருந்து மெல்பேர்ன் நோக்கி வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு சென்ற சுமார் ஆறாயிரத்து 500 ற்கும் மேற்பட்டவர்கள் திரும்பி வரமுடியாத நிலையில் அங்குள்ளனர் என்றும் இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு காலப்பகுதியில் நாட்டைவிட்டு வெளியேறுவது சாத்தியமற்றதாகியிருந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய-இந்திய தூதரகங்களின் ஏற்பாட்டில் சிறப்பு விமானமொன்று டில்லியிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் பெயர்களை பதிவுசெய்த ஒருதொகை பயணிகளை ஏற்றிக்கொண்டு நாளை இந்தியநேரம் பிற்பகல் 2 மணிக்கு ஆஸ்திரேலியா நோக்கி புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமானம் மெல்பேர்ன் நேரம் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு இங்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
