விக்டோரிய மாநிலத்தின் தனிமைப்படுத்தல் மையங்களில் ஒன்றான Holiday Inn ஹோட்டலுடன் தொடர்புடையதாக மேலும் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பரவல் மூலம் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்றுக்கண்டவர் ஏற்கனவே தொற்று இனங்காணப்பட்ட Holiday Inn ஹோட்டல் பணியாளர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர வெளிநாட்டிலிருந்துவந்து ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கோவிட் தொற்று இனங்காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுவருவதால் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை அவசியமாவதாக விக்டோரிய Premier Daniel Andrews கூறினார்.
இதுஒருபுறமிருக்க புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் Alfred Hospital மற்றும் Northern Hospital, Broadmeadows ஆகியவற்றின் மனநல பிரிவில் பணியாற்றியிருந்ததாகவும் இதையடுத்து இப்பிரிவுகள் மூடப்பட்டு அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Premier Daniel Andrews தெரிவித்தார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
