கொரோனா வைரஸ் தொற்று மிகவேகமாக பரவிவருவதை தொடர்ந்து நாட்டுக்குள் வருகின்ற அனைத்து பயணிகளையும் இரண்டு வாரங்களுக்கு மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்துமாறு ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளதை அடுத்து தமது விமான சேவைகளில் ஏற்கனவே பயணத்தை பதிவுசெய்து கொண்டவர்கள் குறிப்பிட்ட பயணங்களை ரத்து செய்து வேறொரு திகதிக்கு மாற்றிக்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு வசதியளிப்பதாக Qantas மற்றும் Jetstar அறிவித்துள்ளன.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரதூரமான சுகாதார பதற்றத்தை உள்வாங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை செய்துகொடுப்பதாக குறிப்பிட்ட விமானசேவைகள் அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பின்படி, குறிப்பிட்ட விமானசேவைகளில் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பயணம் செய்வதற்கு ஏற்கனவே டிக்கெட்டுக்களை பதிவு செய்தவர்கள், தங்கள் பயணங்களை ரத்துச்செய்ய விரும்பினால், டிக்கெட்டுக்களை ரத்து செய்து travel credit வழங்குவதற்கு தயார் என்றும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் அது குறித்து தமக்கு தெரியப்படுத்தி travel credit பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
