மலிவு விலையில் இந்தியாவுக்கான விமானப் பயணச்சீட்டு: Qantas அறிவிப்பு!

Qantas Airline

Qantas Airline Source: AAP Image/Sebastian Kahnert/dpa

ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கான விமானப்பயணச்சீட்டுக்களை மலிவு விலையில் விற்பனை செய்வதாக Qantas அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சர்வதேச எல்லைகள் கடந்த 21ம் திகதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, Qantas இந்த மலிவு விற்பனையை மேற்கொள்கிறது.

இதன்படி சிட்னியிலிருந்து டெல்லி சென்றுவருவதற்கான விமானப்பயணச்சீட்டுக்கான கட்டணம் 1,199 டொலர்களிலிருந்து ஆரம்பமாகிறது.

அதேபோல் சிட்னியிலிருந்து சிங்கப்பூர் சென்று வருவதற்கான கட்டணம் 699 டொலர்களிலிருந்து ஆரம்பமாகிறது. சிட்னியிலிருந்து பாங்கொக் செல்வதற்கான கட்டணம் 799 டொலர்களிலிருந்து ஆரம்பமாகிறது.

Qantas நடத்தும் Asia Flyaway Sale என்ற இந்த மலிவு விற்பனை எதிர்வரும் மார்ச் 1ம் திகதி நிறைவடைகிறது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

1 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now