SKIP TO MAIN CONTENT

Qantas விமானசேவையைப் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!

Qantas airplane in an airport
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில் Qantas விமானசேவையைப் பயன்படுத்தி உள்நாட்டிற்குள் பயணம் செய்பவர்கள் ஏற்கனவே online check-in செய்திருந்தால் கடதாசியில் அச்சிடப்பட்ட boarding pass-ஐ விமானநிலைய வாசல்களில் பெற்றுக்கொள்ளவேண்டிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய விமானசேவை நிறுவனங்கள் நீண்டநாட்களுக்கு முன்னரேயே இதனை அறிமுகப்படுத்தியிருந்த பின்னணியில் Qantas நிறுவனம் இவ்வாரம் முதல் இம்மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வழக்கமாக Qantas விமானம் மூலம் உள்நாட்டிற்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு விமானம் ஏறுவதற்கு முன்பாக வாசல்களில் வைத்து printed boarding pass வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால் இவ்வாரம் முதல் இந்நடைமுறை நீக்கப்படுவதாகவும், online check-in செய்த ஒருவர் digital boarding pass-ஐ தனது கைத்தொலைபேசியில் காண்பித்தால்மட்டும் போதுமானது எனவும் இதன்மூலம் நீண்டவரிசையில் காத்திருப்பதை தவிர்க்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now