SKIP TO MAIN CONTENT

ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்! உலகெங்குமிருந்தும் அஞ்சலி!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96.

Queen Elizabeth II has died at age 96
Queen Elizabeth II has died at age 96 Credit: Max Mumby/Indigo/Getty Images

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் மகாராணியாக இருந்து வந்தார்.

நேற்றையதினம் ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடியிருந்த நிலையில் அவரது மரணச்செய்தி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியின் உடல்நிலை கடந்த அக்டோபர் மாதம் முதலே மோசமாக இருந்ததால் அவரது மூத்த மகன் இளவரசர் சார்லஸ், மகாராணியின் வேலைகளில் பெரும்பாலானவற்றைக் கவனித்து வந்தார்.

தற்போது மகாராணி மரணமடைந்துள்ளதையடுத்து அவரது மகன் சார்ல்ஸ், புதிய மன்னராக இருந்து நாட்டை வழிநடத்துவார்.

"மிகவும் அன்பான தாயின் மறைவு உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களால் ஆழமாக உணரப்படும் என்று எனக்குத் தெரியும்."

என புதிய மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் ராணி எலிசபெத் பிறந்தார். பிரிட்டன் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்த இவர் தனது பதவிக்காலத்தில் 15 பிரதமர்களை கண்டிருக்கிறார்.

இதேவேளை எலிசபெத் மாகராணியின் மரணத்தையொட்டி உலகத்தலைவர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என உலகெங்குமிருந்து பல்வேறு தரப்பினரும் தமது கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துவருகின்றனர்.

————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now