பள்ளி மாணவர்கள் மற்றும் சாலையோர பணியாளர்கள் அதிவேக வாகன ஓட்டுநர்களால் காயப்படும் அல்லது சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும் சந்தர்ப்பங்களை குறைக்க சூரிய சக்தியில் இயங்கும் மொபைல் பணித்தள கமராக்கள் பல இடங்களில் பொறுத்தப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் இந்த புதிய மொபைல் கமராக்கள் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அருகே செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் இயங்க ஆரம்பிக்கும்.
குயின்ஸ்லாந்தில் கடந்த ஆண்டில் வேகம் தொடர்பான 74 மரணங்கள் நடந்துள்ளன.
இந்த மொபைல் கமராக்கள் எந்தெந்த இடங்களில் நிறுவப்படவுள்ளன எப்போதெல்லாம் இவை இயங்கும் என்பதனை குயின்ஸ்லாந்து அரசு வெளியிடவில்லை ஆனால் வெவ்வேறு இடங்களில் வைக்கப்படவுள்ள இந்த கமராக்கள் தொடர்ந்து நகர்த்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆகவே பள்ளிக்கூடங்கள் மற்றும் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் வாகன ஓட்டுனர்கள் எப்போதும் அவதானமாக பொறுப்புடன் வாகனம் ஓட்டும்படியும் இந்த மொபைல் கமராக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் random breath testing போன்று இயங்கும் என்பதனையும் நினைவில் கொள்ளும்படியும் அம்மாநில போக்குவரத்து அமைச்சர் Mark Bailey வலியுறுத்தியுள்ளார்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் உலகின் முதல் புதிய தொழில்நுட்பத்திலான மொபைல் வேக கமராக்கள் இயங்க ஆரம்பிக்கும்.
குயின்ஸ்லாந்து உட்பட நாட்டில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளில் அபாயகரமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து போலீஸின் Acting Superintendent Janelle Andrews எச்சரிக்கிறார்.
மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் சாலைப்பணியிடங்கள் அருகில் இந்த மொபைல் வேக கமராக்கள் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இயக்கப்படும் என்று திரு Bailey கூறுகிறார்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
