SKIP TO MAIN CONTENT

குயின்ஸ்லாந்து தேர்தல் முடிவு: ஒரு பார்வை

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் நாடாளுமன்றத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியான லேபர் கட்சியை ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

Deb Frecklington and Annastacia Palaszczuk
Source: AAP

2 min read

Published

By Raysel


Skip to article content

மொத்தமுள்ள 93 இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு 47 இடங்கள் தேவை. கடந்த முறை லேபர் கட்சி 48 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்திருந்தது. ஆனால் லேபர் கட்சியால் இம்முறை 47 இடங்களைப் பெற இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வேளையில் கிரீன்ஸ் கட்சி இரு இடங்களில் வெல்வது உறுதி என்று பார்க்கப்படுகிறது. எனவே லேபர் கட்சி ஒருவேளை அறுதிப் பெரும்பான்மை பெற இயலாமற்போனாலும், கிரீன்ஸ் கட்சி ஆதரவு தரும் என்பதால் லேபர் கட்சி ஆட்சி அமைப்பது உறுதி என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் Paulin Hanson அவர்களின் One Nation கட்சி பெற்ற வாக்குகளோடு இம்முறை அக்கட்சி பெற்றிருக்கும் வாக்குகளை ஒப்பிட்டால் குறைந்தது 6 சத வாக்குகளை அக்கட்சி இழந்துள்ளது. Paulin Hanson அவர்களின் One Nation கட்சி பல தொகுதிகளில் வெல்ல இயலாமற்போனாலும், இக்கட்சி தனக்கு கிடைக்கும் வாக்குகளை தனக்கு அடுத்தப்படி விருப்பு அடிப்படையில் (preference) எதிர்கட்சியான LNP கட்சிக்கு வழங்குவதால் எதிர்கட்சியான LNP கட்சி இம்முறை சில இடங்களை அதிகமாக  கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை என்பதால் எதிர்கட்சியான LNP கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற இயலவில்லை என்று பார்க்கப்படுகிறது.

எதிர்கட்சியான LNP கட்சி கடந்த நாடாளுமன்றத்தில் 39 இடங்களைக் கொண்டிருந்தது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு 47 இடங்கள் தேவை என்பதால் LNP கட்சி மேலதிகமாக 8 இடங்களைக் கைப்பற்றினால்தன ஆட்சியை பிடிக்க இயலும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் எதிர்கட்சியான LNP கட்சியின் தலைவி Deb Frecklington அவர்களினால்  அப்படியான வெற்றியை பெற இயலவில்லை. குயின்ஸ்லாந்து மாநில Premier Annastacia Palaszczuk அவர்களால் பெரும் வெற்றியை பெற இயலாமற் போனாலும் அவர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்கிறார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆளும் லேபர் கட்சிக்கு இம்முறை கிடைத்திருக்கும் ஒரு அதிர்ச்சி மிக்க தோல்வி லேபர் கட்சியின் South Brisbane தொகுதி வேட்பாளர் Jackie Trad அடைந்திருக்கும் தோல்வி. அவர் கிரீன்ஸ் கட்சி வேட்பாளர் Amy MacMahon யிடம் தோற்றுப்போனார். Jackie Trad முன்னாள் துணை ப்ரீமியராக பதவி வகுத்துவந்தவர்; சமீபத்தில் பள்ளிக்கூட முதல்வர் நியமனம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியதால் பதவி விலகுவதாக அறிவித்தவர்.     


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now