SKIP TO MAIN CONTENT

பிரிஸ்பனில் மேலும் இருவருக்கு கோவிட் தொற்று! NSW-இல் ஒருவருக்கு தொற்று உறுதி!!

People at the Princess Alexandra Hospital in Brisbane,
Brisbane's Princess Alexandra Hospital is now linked to a total of 17 coronavirus cases. Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

குயின்ஸ்லாந்து மாநிலம் பிரிஸ்பனில் சமூகப் பரவல் மூலம் மேலும் இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில Premier Annastacia Palaszczuk அறிவித்தார்.

இதன்மூலம் அங்கு தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் Princess Alexandra மருத்துவமனை தாதி எனவும் மற்றவர் அவரது வீட்டில் தங்கியிருப்பவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 33,408 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிறிதளவான அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனடியாக சோதனையை மேற்கொள்ளுமாறும் குயின்ஸ்லாந்து மக்களிடம் Annastacia Palaszczuk கோரிக்கைவிடுத்துள்ளார்.

புதிதாக இரண்டு பேருக்கு மாத்திரமே கோவிட் தொற்று ஏற்பட்டுள்ள பின்னணியில்,  பிரிஸ்பனில் நடைமுறையிலுள்ள முடக்கநிலையை நாளையதினம் தளர்த்துவதா அல்லது நீட்டிப்பதா என்ற முடிவு அடுத்த 24 மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்படுமென  Annastacia Palaszczuk தெரிவித்தார்.

இதுஒருபுறமிருக்க நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின்  Byron Bay பகுதியில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிஸ்பனில் கோவிட் தொற்றுக்குள்ளான நபர் Byron Bay Beach Hotel-க்கு சென்றிருந்ததாகவும் இதன்மூலம் குறித்த நபருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து Byron Bay, Ballina, Tweed , Lismore ஆகிய பகுதிகளில் ஒன்றுகூடல் மற்றும் முகக்கவசம் தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now