SKIP TO MAIN CONTENT

குயின்ஸ்லாந்து எல்லை விக்டோரிய மாநிலத்தவர்களுக்கு திறக்கப்படுகிறது!

Queensland will reopen its border to Victoria.
Queensland Premier Annastacia Palaszczuk Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

குயின்ஸ்லாந்து மாநிலம் விக்டோரியா மாநிலத்தவர்களுக்கென டிசம்பர் 1 முதல் தனது எல்லைகளை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் தொடர்ந்து 26 நாட்களாக புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று இனங்காணப்படாததையடுத்து இம்முடிவு எட்டப்பட்டதாக குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk தெரிவித்தார்.

இதையடுத்து விக்டோரிய மாநில மக்கள் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு பயணம் செய்ய ஆரம்பிக்கலாம் என விக்டோரிய Premier Daniel Andrews ஊக்குவித்துள்ளார்.

இதுஒருபுறமிருக்க நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்தவர்களும் டிசம்பர் 1 முதல் குயின்ஸ்லாந்துக்குள் பயணம்செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் மக்கள் கிறிஸ்மஸ் விடுமுறையை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கழிப்பதற்கு திட்டமிடலாம் என அம்மாநில Premier Annastacia Palaszczuk ஊக்குவித்துள்ளார்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

 

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

 

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now