SKIP TO MAIN CONTENT

உங்கள் ஒரு வார்த்தை ஒருவரின் தற்கொலையை தடுக்கக்கூடும்!

ஆஸ்திரேலியாவில் இன்றைய நாள் "R U OK?" நாள்.

r u ok day 2018
A day of action dedicated to reminding everyone that any day is the day to ask, “Are you ok?” Source: Trojan Recruitment Group Blog

2 min read

Published

Updated

By Raymond Selvaraj


Skip to article content

R U OK? என்று பிறரை நாம் அடிக்கடி கேட்கவேண்டும் என்று நமக்கு விழிப்புணர்வு தருகிறது இன்றைய நாள். Are You OK? – R U OK Day.

உலகில் தற்கொலை தடுப்பு தினமும் இன்றைய தினமே. World Suicide Prevention Day.

a3a34f7e-e713-4b01-93a0-fb9bd8dde05b_1599709540.jpeg?itok=3l8EGZmh

உலகில் ஆண்டுக்கு சுமார் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதாவது, நாள் ஒன்றுக்கு உலகில் குறைந்தது 2191 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். பெரும்பாலான தற்கொலைகள் பொருளாதார நிலையில் பின்தங்கிய அல்லது மத்தியதர மக்கள் மத்தியில்தான் இடம்பெறுகிறது.   

உலகில் அதிக தற்கொலைகள் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா 51 ஆவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு 3000 க்கும் அதிகமானோர் தற்கொலை செய்கின்றார்கள்.

அதாவது ஒரு நாள் குறைந்து 8 பேர் தற்கொலை செய்கின்றனர். இன்னும் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில், ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவில் 65,000 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். தற்கொலை செய்கின்றவர்களில் பெரும்பாலானவர்கள் 44 வயதுக்கு குறைவானவர்கள்; முக்கால்வாசிபேர் ஆண்கள்.

இந்த தற்கொலைகளை எப்படி தடுப்பது?

ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை அவர்தான் எடுக்கின்றார் என்றாலும், அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவருக்கு உதவினால் அல்லது அவரின் பிரச்னைக்கு செவிமடுத்தால் அந்த தற்கொலையை நிச்சயம் தடுக்க முடியும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

குறைந்தபட்சம் அடுத்தவரிடம் “Are You OK?” “R U OK?” “ஆர் யூ ஓகே?” என்ற வார்த்தையை கேட்கலாமே?

R U OK? How to start the conversation?
R U OK? How to start the conversation? Source: r u ok Facebook

நமது ஒரு வார்த்தை ஒரு உயிரைக் காக்கலாம்.

மனிதன் தனிமையில் சுருங்கிப்போகும் வேளையில், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் வேளையில், டானிக் தரும் நமது வார்த்தை: நீங்கள் நலமா?

இப்படியான ஆறுதல் வார்த்தையை பிறரிடம் கேட்க தற்கொலையையை தடுக்கும் யுக்திகள் அறிந்த expert – நிபுணராக இருக்கத் தேவையில்லை. ஒரேயொரு வார்த்தை: எப்படி இருக்கிறீங்க? எல்லாம் நலமா?

இன்றைய கொரோனாவைரஸ் சூழலில் நாம் முடங்கிப்போயுள்ள பின்னணியில், பொருளாதார நலிவைச் சந்திக்கும் பின்னணியில், ஒரேயொரு வார்த்தை: நலமா? எப்படி வாழ்க்கைபோகுது? என்ற விசாரிப்புகள்.

Woman in quarantine
Source: Getty Images/Jasmin Merdan

உங்கள் விசாரிப்பு ஒருவரை உங்களோடு அதிகள் பேச வைக்கும்; அதன்மூலம் அவர் தந்து பிரச்சனையை உங்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடும். நீங்கள் அவரின் பிரச்சனையை காதுகொடுத்து கேட்கலாம்; அல்லது அவருக்கு உதவும் அமைப்பிடம், நபரிடம் செல்லுமாறு வழிகாட்டலாம்.

உங்கள் ஒரு வார்த்தை ஒருவரின் தற்கொலையை தடுக்கலாம்.   

If you or someone you know requires mental health support, you can get assistance from Lifeline on 13 11 14 or Beyond Blue 1300 22 46 36 or the Suicide Call Back Service on 1300 659 467.       


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now