உலகில் தற்கொலை தடுப்பு தினமும் இன்றைய தினமே. உலகில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு 2500 பேர் தற்கொலை செய்கின்றார்கள். அதாவது ஒரு நாள் 7 பேர் தற்கொலை செய்கின்றனர். இன்னும் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில், ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவில் 65,000 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். தற்கொலை செய்கின்றவர்களில் பெரும்பாலானவர்கள் 44 வயதுக்கு குறைவானவர்கள்; முக்கால்வாசிபேர் ஆண்கள்.
இந்த தற்கொலைகளை எப்படித் தடுப்பது?
குறைந்தபட்சம் அடுத்தவரிடம் “Are You OK?” R U OK? ஆர் யூ ஓகே? என்ற வார்த்தையை கேட்கலாமே? நமது ஒரு வார்த்தை ஒரு உயிரைக் காக்கலாம். மனிதன் தனிமையில் சுருங்கிப்போகும் வேளையில், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் வேளையில், உற்சாகம் தரும் நமது வார்த்தை:
