SKIP TO MAIN CONTENT

உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு எந்த இடம்?

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவைகளில் தமிழ் மொழி பழமையான மொழி, செம்மொழி என்று பல பெருமைகளைக் கொண்டது. இது நாமறிவோம். ஆனால் உலக மொழிகளில் ஒரு மொழியை பேசுவோர் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் மொழிக்கு எத்தனாம் இடம்?

Tamil language
Source: Raj

5 min read

Published


Skip to article content

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவைகளில் தமிழ் மொழி பழமையான மொழி, செம்மொழி என்று பல பெருமைகளைக் கொண்டது. இது நாமறிவோம். ஆனால் உலக மொழிகளில் ஒரு மொழியை பேசுவோர் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் மொழிக்கு எத்தனாம் இடம்? Far and Wide எனும் இணையம் அந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முதல் இடங்களில் உள்ள 25 மொழிகளைத் தொகுத்து ஒரு பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த மொழி பேசுவோர் எத்தனை பேர் என்றும் கட்டுரையாளர்  Lissa Poirot அந்த பட்டியலில் தந்துள்ளார்.  

இடம்மொழிபேசுவோர் எண்ணிக்கை
1English — 1.5 Billion Speakersஉலகில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழி. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே இந்த மொழி தோன்றியதாக நம்பப்படுகிறது. ஜெர்மன் பழங்குடிகள் பிரிட்டனை ஊடுருவியபோது அவர்கள் பேசிய மொழி நாளடைவில் பிரிட்டனின் மொழியாக மாறியதாக மொழி வல்லுனர்கள் கூறுகின்றனர். உலகின் பொது மொழியாக இம்மொழி வேகமாக மாறிவருகிறது.150 கோடி மக்கள் (உலகின் 20 சத மக்களின் மொழி)  
2Mandarin Chinese — 1.3 Billion Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:China, Singapore, Taiwanசீன மக்கள் தொகை வேகமாக பெருகிவருவதால் ஒரு கட்டத்தில் ஆங்கிலம் பேசுகின்ற மக்களின் எண்ணிக்கையைவிட இம்மொழி அதிகம் பேரால் பேசப்படும் கூறுகள் இருப்பதாக மொழி வல்லுனர்கள் கூறுகின்றனர்.130 கோடி மக்கள்.
3Spanish — 661 Million Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:Argentina, Chile, Colombia, Costa Rica, Cuba, Dominican Republic, Ecuador, El Salvador, Equatorial Guinea, Guatemala, Honduras, Mexico, Nicaragua, Panama, Paraguay, Peru, Sahrawi Arab Democratic Republic, Spain, Uruguay, Venezuelaஇந்த மொழி தோன்றிய ஸ்பெயின் நாட்டைவிட ஸ்பெயின் காலனியாளர்கள் அறிமுகம் செய்த தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இம்மொழி அதிகம்  பேசப்படுகிறது.சுமார் 66 கோடி மக்கள்.
4இந்தி மற்றும் உருது எனும் இரு மொழிகளும் இணைந்து இந்துஸ்தானி என்று அறியப்படுகிறது.அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்: Fiji and India (Hindi); Pakistan (Urdu).உருது மொழி எழுதப்படும் எழுத்து வடிவம் மாறுபடுகிறது. ஆனால் இதுவும் இந்தியை ஒத்த மொழியே.  சுமார் 55 கோடி மக்கள்.
5Arabic — 422 Million Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:Algeria, Bahrain, Chad, Comoros, Djibouti, Egypt, Iraq, Jordan, Kuwait, Lebanon, Libya, Mauritania, Morocco, Oman, Palestine, Qatar, Sahrawi Arab Democratic Republic, Saudi Arabia, Somalia, Somaliland, Sudan, Syria, United Arab Emirates, Yemen.சுமார் 42 கோடி மக்கள்.
6Malay — 281 Million Speakerஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:Brunei, Malaysia, Singapore, Indonesia.சுமார் 28 கோடி மக்கள்.
7Russian — 267 Million Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்: Abkhazia, Belarus, Kazakhstan, Kyrgyzstan, Russia, South Ossetia, Transnistria.சுமார் 27 கோடி மக்கள்.
8Bengali — 261 Million Speakersஅரசின் மொழியாக இருக்கும் நாடு:Bangladeshசுமார் 26 கோடி மக்கள்.
9Portuguese — 229 Million Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:Angola, Brazil, Cape Verde, East Timor, Equatorial Guinea, Guinea-Bissau, Macau, Mozambique, Portugal, Sao Tome and Principeசுமார் 23 கோடி மக்கள்.
10French — 229 Million Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:Benin, Burkina Faso, Burundi, Cameroon, Canada, Central African Republic, Chad, Comoros, Democratic Republic of the Congo, Republic of the Congo, Djibouti, Equatorial Guinea, France, Gabon, Guinea, Haiti, Ivory Coast, Luxembourg, Madagascar, Mali, Monaco, Niger, Rwanda, Senegal, Seychelles, Switzerland, Togo, Vanuatuசுமார் 23 கோடி மக்கள்.
11Hausa — 150 Million Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:Niger, Nigeriaசுமார் 15 கோடி மக்கள்.
12Punjabi — 148 Million Speakerஇந்தியாவின் தேசிய மொழிகளில் ஓன்று.சுமார் 15 கோடி மக்கள்.
13German — 129 Million Speakerஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:Austria, Germany, Liechtenstein, Luxembourg, Slovakia, Switzerland.சுமார் 13 கோடி மக்கள்.
14Japanese — 129 Million Speakersஅரசின் மொழியாக இருக்கும் நாடு: Japan.சுமார் 13 கோடி மக்கள்.
15Persian — 121 Million Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:Iran, Afghanistan, Tajikstan.சுமார் 12 கோடி மக்கள்.
1616. Swahili — 107 Million Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:Rwanda, Ugandaசுமார் 11 கோடி மக்கள்.
17Vietnamese — 95 Million Speakersஅரசின் மொழியாக இருக்கும் நாடு: VietnamCzech Republic எனும் நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.சுமார் 10 கோடி மக்கள்.
18Telugu — 92 Million Speakersதிராவிட மொழிக் குடும்பத்தில் அதிக மக்களால் பேசப்படும் மொழி. இந்திய தேசிய மொழிகளில் ஒன்று.சுமார் 9 கோடி மக்கள்.
19Italian — 87 Million Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:Italy, Malta, San Marino, Switzerland, Vatican Cityசுமார் 9 கோடி மக்கள்.
20Javanese — 84 Million SpeakersIndonesiaசுமார் 8 கோடி மக்கள்.
2121. Wu Chinese — 80 Million Speakerசீனாவின் அரசு மொழியல்ல என்றபோதிலும், Shanghai, Jiangsu & Zhejiang எனும் பிராந்தியங்களில் இம்மொழி அதிகள் பேசப்படுகிறது.சுமார் 8 கோடி மக்கள்.
22Korean — 77 Million Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:North Korea, South Koreaசுமார் 8 கோடி மக்கள்.
2323. Tamil — 75 Million Speakersஅரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:Singapore, Sri Lanka.இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்று. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் கணிசமான மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.  சுமார் ஏழரை  கோடி மக்கள்.
24Marathi — 74 Million Speakersசம்ஸ்கிருத மொழியிலிருந்து தோன்றிய இம்மொழி இந்தியாவின் வர்த்தக தலைநகரம் என்று பார்க்கப்படும் மும்பை நகரின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பேசப்படும் மொழி. இந்திய தேசிய மொழிகளில் ஒன்று.சுமார் ஏழரை கோடி மக்கள்.
25Yue Chinese — 72 Million Speakerசீனாவின் அரச மொழியல்ல என்றபோதிலும் Hong Kong, Macau, Guangdong,  Guangxi எனும் சீன பிராந்தியங்களில் இம்மொழி பேசப்படுகிறது.சுமார் 7 கோடி மக்கள்.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now