இலங்கையில் காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ள அல்லது சிறைபிடிக்கப்பட்ட யானைகளில், 1941ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக ஒரு யானை இரட்டைக் கன்றுகளை ஈன்றுள்ளது.
“கன்றுகளும் தாயும் நலமாக உள்ளன” என்று பின்னாவல யானை காப்பகத்தின் தலைவர் ரேணுகா பண்டாரநாயக்கா செய்தியாளர்களிடம் கூறினார்.
பிறந்த இரட்டைக் கன்றுகளும் ஒப்பீட்டளவில் அளவில் சிறியவை என்றாலும் அவை ஆரோக்கியமாக இருக்கின்றன.
சுராங்கி ஏற்கனவே, 2009ஆம் ஆண்டில், ஒரு ஆண் யானைக்கு தாயானார்.
இந்த இரட்டைக் கன்றுகளின் தந்தை, 17 வயதாகும் பாண்டு என்ற யானையும், ஆதரவற்ற காட்டு யானைகளைப் பராமரிப்பதற்காக 1975 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட பின்னாவல யானை காப்பகத்தில் பராமரிக்கப்படும் 81 யானைகளில் ஒன்று.

முக்கிய சுற்றுலா தலமான இந்த யானை காப்பகம் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கில் உள்ள மின்னேரியா காட்டுப் பகுதியில் கடந்த வருடம் இரட்டை யானைகள் பிறந்திருக்கக் காணப்பட்டதாக வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில் சுமார் 200 வளர்ப்பு யானைகள் இருப்பதாகவும் காட்டுப் பகுதியில் சுமார் 7,500 யானைகள் இருப்பதாகவும் உத்தியோக தரவுகள் சொல்கின்றன.
காட்டு யானைகளைப் பிடிப்பது இலங்கையில் மரண தண்டனைக்குரிய குற்றம், இருந்தாலும் அப்படிப் பிடிப்பவர்களோ அல்லது அவற்றைக் கொல்பவர்களோ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது மிக அரிது என்று சொல்லப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளில், வன விலங்கு காப்பகங்களிலிருந்து 40ற்கும் மேற்பட்ட யானைக்குட்டிகள் திருடப்பட்டுள்ளன என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
