SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளவர்கள் கிறிஸ்மஸ்தீவு முகாமுக்கு மாற்றம்!

The Christmas Island Immigration Detention Centre will be re-opened.
The Christmas Island Immigration Detention Centre will be re-opened. Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவில் பாரதூரமான குற்றச்செயல் ஒன்றுக்காக தண்டனைபெற்றநிலையில் நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ளவர்களை  கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு இடமாற்றுவதற்கு முடிவெடுத்துள்ளதாக Australian Border Force அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக அல்லது சட்டபூர்வமாக வந்து தங்கியிருந்த காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனைபெற்று, பின்னர் அவர்களது சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்பும்வரையில் குடிவரவு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முகாம்களில் ஆஸ்திரேலியர்கள் அல்லாத பலர் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

தற்போதைய கொரோனா பரவல் காலப்பகுதியில், யாரையும் நாடு கடத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவுள்ளது. விமான நிலையங்கள்  மூடப்பட்ட நிலையிலும் முக்கிய விமானசேவைகள் நிறுத்தப்பட்ட நிலையிலும் உள்ளமை தெரிந்ததே.

ஆனால், ஆஸ்திரேலிய அகதிகள் முகாம்களில் கொரோனா அச்சமிருப்பதால் அங்குள்ளவர்களுக்கு மருத்துவ ரீதியான பாதுகாப்பினை வழங்கும்பொருட்டு, நாடுகடத்தப்படவுள்ளநிலையிலுள்ள குறிப்பிட்ட தொகுதியினரை கிறிஸ்மஸ் தீவு North West Point முகாமுக்கு கொண்டுசெல்வதற்கு Australian Border Force முடிவெடுத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சீனாவின் Wuhan-இலிருந்து அழைத்துவரப்பட்ட ஆஸ்திரேலியர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக பயன்படுத்தப்பட்ட பகுதியிலேயே இவர்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கிறிஸ்மஸ் தீவின் மற்றுமொரு முகாமில் தற்போது பிரியா - நடேசன் குடும்பம் மாத்திரம் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு, மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கு முடிவு கிடைக்காத நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now