ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்தும்வகையில், பல்சமூகங்களை உள்ளடக்கிய Community Sponsorship செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு, ஆஸ்திரேலிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் நடைமுறையிலிருப்பதைப் போன்ற இச்செயற்றிட்டமூடாக, முதலில் ஆண்டொன்றுக்கு 5000 அகதிகளை குடியமர்த்தும் அதேநேரம் அடுத்த 5 ஆண்டுகளில் இவ்வெண்ணிக்கையை 10,000 ஆக அதிகரிக்கலாம் என Save the Children, Refugee Council of Australia, Amnesty International Australia, Australian Churches Refugee Taskforce, Welcome to Australia and Rural Australians for Refugees ஆகிய அமைப்புக்கள் பரிந்துரைத்துள்ளன.
வருடமொன்றுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியா உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சுமார் 1000 பேருக்கு மாத்திரமே சமூகம் சார்ந்த அடிப்படையில் இடமொதுக்கப்படுகின்றது.
இந்தநிலையில் Community Sponsorship ஊடாக அகதிகள் நலன்சார் அமைப்புக்கள், தனிநபர்கள், குடும்பங்கள், உறவினர்கள், வர்த்தக நிறுவனங்கள் என பல்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து, தேவையான பணத்தைச் செலுத்துவதன் மூலம் அடைக்கலம் தேடுபவர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்துவது இலகுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Share
