தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டபின் வீதிகளில் படுத்துறங்கும் நிலையிலுள்ள அகதி!

ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம்கோரி வந்தநிலையில் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட அகதி ஒருவர், மெல்பன் வீதிகளில் படுத்துறங்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

disability refugee

Refugee Mahbubur Rahman while he was in detention on Nauru. Source: Supplied

36 வயதான பங்களாதேஷ் பின்னணிகொண்ட Mahbubur Rahman என்பவரே இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முதுகுத்தண்டு தொடர்பிலான நோய்நிலைமையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இவர், கடந்த பல மாதங்களாக வீதிகளிலேயே உறங்கிவருதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்புமுகாமிலிருந்து, மருத்துவதேவைக்காக, கடந்த 2019ம் ஆண்டு மெல்பன் அழைத்துவரப்பட்ட இவர், Park ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டு பின் Bridging விசாவுடன் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Police are seen outside the the Park Hotel in Melbourne, Saturday, January 09, 2021. (AAP Image/Erik Anderson) NO ARCHIVING
Police are seen outside the the Park Hotel in Melbourne, Saturday, January 09, 2021 Source: AAP
மெல்பனில் கோவிட் பரவல் உச்சத்தில் இருந்தபோது Status Resolution Support Services (SRSS)  ஊடாக இரு வாரங்களுக்கான கொடுப்பனவாக 550 டொலர்கள் வழங்கப்பட்டதாகவும், இது தனது வாடகை உட்பட ஏனைய செலவுகளுக்குப் போதுமானதாக இருக்கவில்லை எனவும் Mahbubur Rahman  கூறுகிறார்.

தனது வீடற்றநிலை குறித்து case manager  உட்பட அனைவரிடமும் கடந்த 3 மாதங்களாக முறையிட்டுவருவதாகவும், ஆனால் இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கவில்லை எனவும் Mahbubur Rahman தெரிவித்துள்ளார்.

நவுறுவில் இருந்தபோது கீழே விழுந்ததால் தொடை எலும்பில் ஏற்பட்ட பாதிப்பையடுத்து, தடியொன்றின் உதவியுடனேயே நடக்க முடிவதாகவும், தனது முதுகுத்தண்டு நோய்நிலைமை காரணமாக வேலை எதுவும் செய்யமுடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Refugee advocates wave to people inside the Park Hotel in Carlton whilst they participate in a 'Healthcare not detention' rally at Lincoln Square in Melbourne, Saturday, October 23, 2021. (AAP Image/Daniel Pockett) NO ARCHIVING
Refugee advocates wave to people inside the Park Hotel in Carlton on Saturday. Source: AAP
இவ்விடயம் தொடர்பில பதிலளித்துள்ள உள்துறை அமைச்சு, ஒவ்வொருவரது தனிப்பட்ட நிலைமை தொடர்பில் கருத்துக்கூறமுடியாது எனவும், Status Resolution Support Services (SRSS) ஊடாக வழங்கப்படும் அனைத்து உதவிகளுக்கு அனைவரும் தகுதிபெறுவதில்லை எனவும் கூறியுள்ளது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand