SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் வாழும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களையும் சைவசமயத்தையும் பற்றிய ஆராய்ச்சி

தமிழ் பேசல் சைவம் பேசல் : ஓர் ஆஸ்திரேலியத் தமிழ் சைவ கோவிலில் பின்பற்றப்படும் மொழி நடைமுறைகள் ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் கிருஸ்தவ மதமல்லாத வேறு மதம் இந்து மதம் என்பது உங்களுக்கு தெரியுமா? சுமார் 73,000 மக்கள் தங்களது வீடுகளில் தமிழ் மொழியைப் பேசுகிறார்கள். 2011 கணக்கெடுப்பிலிருந்து, இந்த எண்ணிக்கை 45% ஆல் அதிகரித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பேசப்படும் மொழிகளில் 14வது பொது மொழி, தமிழாகும்.

Niru Perera
Niru Perera Source: Niru Perera

2 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒர் சைவ கோவிலில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியைப் பற்றி அண்மையில் நடாத்தப்பட்ட நிருக்க்ஷி பெரேராவின் ஆராய்ச்சி, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பேசும் சைவ மக்களின் மொழிக்கும் மதத்திற்கும் இடையே உள்ள வலுவான தொடர்பை ஆராய்ந்து பார்க்கிறது. இது ஆஸ்திரேலியாவில் வாழும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களைப் பற்றிய முதலாவது முனைவர் பட்டத்திற்கான (PhD) ஆராய்ச்சியாகும்.

 

இரண்டாம் தலைமுறை தமிழ் இளைஞர்கள் வகுப்பறையில் தமிழை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய சைவ ஆலயத்தின் ஞாயிறு பள்ளியில் ஒரு வருட காலத்தை  நிரு கழித்தார். சைவ மாணவர்களிடையே ஆங்கிலம் ஒரு வலுவான மொழியாக இருந்த போதிலும் சைவ மதம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி இம்மாணவர்கள் பேசும் போது தமிழ் மொழியைத்தான் இன்னமும் உபயோகிக்கிறார்கள் என்பதை அவதானித்தார். அவர்கள் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கொள்ள முனைந்த வழிகள் அவர்களது பெற்றோர்களது  வழிகளை விட வேறுபட்டதாக இருந்தது.  இக்கலவை, மாணவர்கள் தங்கள் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய தமிழ் மொழியை எப்படி உபயோகிக்கிறார்கள் என்ற திறனைக் காட்டுகிறது.

 

ஆஸ்திரேலியாவில் பிறந்த தமிழ் சிறுவர்களுக்கு ஓர் வலுவான தமிழ் அடையாளத்தை அவர்கள் குடும்பங்கள் அளிப்பதற்கு, சைவ ஆலயம் உதவுகிறது என்பது ஓர் முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் விளைவாக, சிறுவர்கள் தாங்களும் உள்ளூர் மற்றும் உலகளாவிய தமிழ் சமூகத்தில் ஓர் அங்கம் வகிப்பதற்காக தமிழ் மொழியை தொடர்ந்து உபயோகிக்க விரும்புகிறார்கள். தமிழர் என்ற இந்த உணர்ச்சி ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் முதல் தலைமுறை சிறுவர்கள் தங்கள் அடயாளத்தை கண்டு பிடிக்க உதவுகிறது.

 

இந்த ஆய்வறிக்கையை பின்வரும் இணையதளத்தில் காணலாம்: https://doi.org/10.4225/03/58ffdf87350a0

 

SBS தமிழ் ஒலிபரப்பிற்கு, நிரு பெரேரா வழங்கிய நேர்காணலை இங்கே கேட்கலாம்: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/research-language-practices-tamil-hindu-temple-australia?language=ta

 

(with thanks to Surjani Uthayakumaran for the Tamil translation)

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now