அமெரிக்காவில் உள்ள Dartmouth கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள், Long கோவிட் உடன் prosopagnosia -முகங்களை அடையாளம் காண இயலாமையை இணைத்துள்ளனர்.
Long கோவிட் உள்ள 54 பேரின் சுய-அறிக்கை கணக்கெடுப்பு தரவின்படி, பெரும்பான்மையானவர்கள் அடையாளம் காணல் மற்றும் navigation திறன்களில் குறைபாடு உள்ளமையை முறையிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
"Long கோவிட் உள்ளவர்களுக்கு உயர் மட்ட பார்வைக் குறைபாடுகள் அசாதாரணமானது அல்ல என்று தோன்றுகிறது." என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஆரம்பத் தொற்றுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகும், புதிய அறிகுறிகள் தொடர்ச்சியாக இருந்தால் அல்லது அதிகரித்தால் அல்லது இந்த அறிகுறிகள் வேறு எந்தக் காரணமும் இல்லாமல் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நீடித்தால், அதனை Long கோவிட் என உலக சுகாதார அமைப்பு வரையறுக்கிறது.
Long கோவிட் நோயின் பொதுவான அறிகுறிகளில் சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் நினைவாற்றல் குறைபாடு மற்றும் கவனம்செலுத்துவதில் குறைபாடு அடங்கும்.
Griffith பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் Long கோவிட் மற்றும் chronic fatigue syndrome உள்ளவர்களில் இதேபோன்ற மூளை அமைப்பு மாற்றங்களைக் கண்டறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
NSW மாநிலத்தில், வாராந்திர கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிது வீழ்ச்சி காணப்படுகிறது. கடந்த வாரம் பதிவான 8,905 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது இவ்வாரம் 8,563 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், மாநிலத்தில் மார்ச் 3 முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 834 பேருடன் ஒப்பிடும்போது, இந்த வாரம் 873 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்.
விக்டோரியாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த வாரம் 4,467 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் இது 3,960 ஆக இருந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114ல் இருந்து 152 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பயணிகளிடையே measles-தட்டம்மை தொற்று அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தட்டம்மை தடுப்பூசியைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஈஸ்டர் விடுமுறைக்கு முன்னர் அதனைப் போட்டுக்கொள்ளுமாறு, NT அரசு வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தட்டம்மை பரவல் தற்போது காணப்படுவதாகவும், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நாடுகளில் இந்த வைரஸ் பொதுவானதாக இருப்பதாகவும் அது கூறியது.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், second-generation கோவிட் தடுப்பூசிக்கான மனித பரிசோதனைகளை தொடங்கியுள்ளனர். தடுப்பூசியை பரிசோதிக்க 70 ஆரோக்கியமான தன்னார்வலர்களை ஆராய்ச்சியாளர்கள் தேடுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை, 30 செப்டம்பர் 2022 வரையிலான 12 மாதங்களில் 1.6 சதவீதம் (அல்லது 418,500) அதிகரித்துள்ளது, இது கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சியைப் போலவே உள்ளது.
இதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 28 நாட்களில் உலகளாவிய கோவிட் தொற்றுகள் 31 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இறப்புகளில் 46 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிக அளவில் கோவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.