SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் புதிதாக மூவருக்கு கோவிட் தொற்று! கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன!!

விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக மூவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ملبورن
ملبورن Source: AAP

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • மெல்பனில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் வியாழன் நள்ளிரவு முதல் மேலும் தளர்த்தப்படுகிறது.
  • விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • மொத்தமாக 55 பேர் விக்டோரியாவில் தற்போது கோவிட் தொற்றுடன் உள்ளனர்.

இதுதவிர வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மெல்பனில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் நாளை நள்ளிரவு 11.59 மணிமுதல் மேலும் தளர்த்தப்படுவதாக Acting Premier James Merlino அறிவித்தார்.

இதன்படி வியாழன் நள்ளிரவு 11.59 மணிமுதல் மெல்பனில் பெருநகரில் வாழ்பவர்கள்

  • விக்டோரியாவின் எந்தப் பகுதிக்கும் பயணம் செய்யலாம். Alpine resorts-க்கு செல்பவர்கள் மட்டும் 72 மணத்தியாலங்களுக்கு முன்னர் கோவிட் பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும்.
  • வீடுகளுக்கு நாளொன்றுக்கு இரு விருந்தினர்களுக்கு அனுமதி உண்டு.
  • வெளியிடங்களில் 20 பேர் வரை ஒன்றுகூட முடியும்.
  • வெளியரங்குகளில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. ஆனால் வீடு தவிர ஏனைய அனைத்து உள்ளரங்குகளிலும் பொதுப்போக்குவரத்திலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு  உடற்பயிற்சிக்கூடங்கள் போன்றவை மீண்டும் இயங்கமுடியும்.

இதுதவிர வேறு என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

மொத்தமாக 55 பேர் விக்டோரியாவில் தற்போது கோவிட் தொற்றுடன் உள்ளனர்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now