விக்டோரிய மாநிலத்தின் தனிமைப்படுத்தல் மையங்களில் ஒன்றான Melbourne Airport Holiday Inn ஹோட்டலுடன் தொடர்புடையதாக மொத்தமாக மூவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் இப்பரவல் எவ்வாறு ஏற்பட்டது என்பதை கண்டறியும் நோக்கிலும் சுத்தப்படுத்தல் பணிகளுக்காகவும் குறித்த ஹோட்டல் இன்றையதினம் மூடப்படுகிறது.
இந்த ஹோட்டலில் தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வந்தவர்களும் அங்கிருந்த ஏனையோரும் வேறு ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்துவந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு கடந்த 7ம் திகதி வெளியேறிய பெண் ஒருவருக்கும் குறித்த ஹோட்டலில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களுக்கும் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த ஜனவரி 29ம் திகதி முதல் பெப்ரவரி 9ம் திகதிவரை இந்த ஹோட்டலிலிருந்தவர்கள் மற்றும் 15 நிமிடங்களுக்கு மேல் அங்கு நேரம் செலவிட்டவர்கள் உட்பட பலரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே Grand Hyatt ஹோட்டலில் பணிபுரிந்த 26 வயது நபருக்கு கடந்த வாரம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் தற்போது Holiday Inn ஹோட்டலில் பணிபுரிந்த மூவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படமுன் இவர்கள் சென்றுவந்த இடங்கள் தொடர்பிலான விவரங்களை வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத் திணைக்களம் அந்த இடங்களுக்குச் சென்றவர்களை உடனடியாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அந்த விவரங்கள் பின்வருமாறு:
| Location | Site | Exposure period | Notes |
|---|---|---|---|
| Brighton | North Point Cafe2B North RdBrighton, VIC 3186 | 08:10-09:3031/1/2021 | Case dined outside and used bathroom |
| Brandon Park | Kmart, Brandon Park Shopping CentreCnr Springvale Rd and Ferntree Gully RdBrandon Park, VIC 3170 | 16:35-17:1031/1/2021 | Case attended venue |
| Clayton South | Nakama Workshop85 Main RdClayton South, VIC 3169 | 11:15-12:001/2/2021 | Case attended venue |
| Heatherton | Melbourne Golf Academy385 Centre Dandenong RdHeatherton, VIC 3202 | 17:19-18:351/2/2021 | Case attended venue |
| Keysborough | Aces Sporting Club (Driving Range)Cnr Springvale Rd and Hutton RdKeysborough, VIC 3173 | 22:00-23:1530/1/2021 | Case attended venue |
| Keysborough | Kmart, Parkmore Keysborough Shopping CentreC/317 Cheltenham RdKeysborough, VIC 3173 | 16:00-17:0031/1/2021 | Case attended venue |
| Maidstone | Marciano's Cakes126 Mitchell StMaidstone VIC 3012 | 09:45-10:255/2/2021 | Case attended venue |
| Melbourne | Exford Hotel199 Russell StMelbourne, VIC 3000 | 23:00-23:3529/1/2021 | Case attended bottle shop |
| Moorabbin Airport | Lululemon, DFO MoorabbinShop G-039/250 Centre Dandenong RdMoorabbin VIC 3194 | 17:00-17:451/2/2021 | Case attended venue |
| Noble Park | Club Noble46/56 Moodemere StNoble Park VIC 3174 | 14:36-15:3030/01/2021 | Case attended venue |
| Springvale | Bunnings Springvale849 Princes HwySpringvale, VIC 3171 | 11:30-12:151/2/2021 | Case attended venue |
| Springvale | Coles Springvale825 Dandenong RdSpringvale, VIC 3171 | 17:00-18:0031/1/2021 | Case attended venue |
| Springvale | Sharetea Springvale27C Buckingham AveSpringvale, VIC 3171 | 18:50-19:301/2/2021 | Case attended venue |
| Springvale | Woolworths Springvale302 Springvale RdSpringvale, VIC 3171 | 18:30-19:301/2/2021 | Case attended venue |
| Sunbury | Cellarbrations34 Batman AvenueSunbury VIC 3429 | 17:44-18:197/2/2021 | Case attended venue |
| Sunbury | Cellarbrations34 Batman AvenueSunbury VIC 3429 | 18:17-19:026/2/2021 | Case attended venue |
| Sunbury | Sunny Life Massage - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 3429 | 16:30-18:306/2/2021 | Case attended venue |
| Sunbury | PJ's Pet WarehouseShop 2, 104 Horne StreetSunbury VIC 3429 | 15:37-16:105/2/2021 | Case attended venue |
| Sunbury | Bakers Delight - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 3429 | 15:40-16:155/2/2021 | Case attended venue |
| Sunbury | Aldente Deli - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 3429 | 15:45-16:235/2/2021 | Case attended venue |
| Sunbury | Sushi Sushi - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 3429 | 15:53-16:285/2/2021 | Case attended venue |
| Sunbury | Asian Star - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 3429 | 15:57-16:305/2/2021 | Case attended venue |
| Sunshine | Dan Murphy's47 McIntyre RdSunshine VIC 3020 | 17:50-18:305/2/2021 | Case attended venue |
| Sunshine | Dan Murphy's47 McIntyre RdSunshine VIC 3020 | 18:50-19:306/2/2021 | Case attended venue |
| Taylors Lakes | Off Ya Tree Watergardens399 Melton HighwayTaylors Lakes VIC 3038 | 13:00-13:526/2/2021 | Case attended venue |
| West Melbourne | Kebab Kingz438 Spencer StWest Melbourne, VIC 3003 | 23:24-00:1529/1/2021 | Case dined outside |
