SKIP TO MAIN CONTENT

மெல்பனில் 8 வயதுச் சிறுமி மரணம்- மருத்துவமனை அலட்சியமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு

Amrita Lanka
Source: ABC Australia

2 min read

Published

Updated


Skip to article content

மெல்பனில் 8 வயதுச்சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ABC செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29ம் திகதி அம்ரிதா வர்ஷினி லங்கா என்ற சிறுமிக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து குடும்பமருத்துவரிடம் தந்தை அழைத்துச்சென்றுள்ளார்.

சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர் அவருக்கு appendicitis இருக்கலாம் என சந்தேகித்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு பணித்திருக்கிறார்.

இதையடுத்து மொனாஷ் சிறுவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட அம்ரிதா லங்கா, இரு மணிநேரங்கள் காத்திருந்தபின் முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவருக்கு appendicitis இருப்பதுபோல தெரியவில்லை எனவும் அது gastroenteritis-ஆக இருக்கலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அம்ரிதாவுக்கு இரவு 9 மணியளவில் சுவாசிப்பதற்கு கடினமாக இருந்ததாகவும், உடனடி உதவிக்கான staff assistance button-ஐ அழுத்தியபோதிலும் 20-25 நிமிடங்களாக யாரும் வரவில்லை எனவும், பின்னர் வரவேற்பு பகுதிக்கு நிலைமையைக் கூறி 15 நிமிடங்களின் பின் மருத்துவ உதவி கிடைத்ததாகவும் தாயார் Chandra Sekhar Lanka தெரிவித்துள்ளார்.

அம்ரிதா சரியான முறையில் உணவு உட்கொள்ளாததாலேயே அவ்வாறு இருப்பதாகவும், கவலைப்படத் தேவையில்லை எனவும் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக Chandra Sekhar Lanka குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் அம்ரிதாவின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகு 3 மணிநேரங்களில் அறை ஒன்றுக்கு மாற்றப்பட்ட அம்ரிதாவுக்கு உடல்நிலை மோசமாகி cardiac arrest ஏற்பட்டு இதயம் நின்றுபோனதாகவும், ஆனால் உடனடி சிகிச்சை மூலம் இதயம் மீண்டும் இயங்க ஆரம்பித்ததாகவும் தந்தை Satya Tarapureddi  தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அடுத்தநாள் சனிக்கிழமை காலை 10.17 மணிக்கு-மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு 21 மணித்தியாலங்களின் பின்னர்- அம்ரிதா மரணமடைந்ததாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

தனது மகளின் உடல்நிலை தொடர்பில் பல தடவைகள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தபோதும் அதனை அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்கள் முன்கூட்டியே கவனமெடுத்திருந்தால் தமது மகள் இன்னமும் உயிருடன் இருந்திருப்பார் எனக் குறிப்பிட்டுள்ள பெற்றோர், தமது மகள் எவ்வாறு மரணமடைந்தார் என்பது தமக்கு இதுவரை தெரியாது எனவும், இது குறித்த விசாரணை முடிவிற்காக தாம் காத்திருப்பதாகவும்  ABC-இடம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள விக்டோரிய சுகாதார அமைச்சர் Martin Foley, முழுமையான விசாரணை நடத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு மொனாஷ் சிறுவர் மருத்துவமனையிடம் வலியுறுத்தியுள்ளார்.


If you are feeling distressed and need emotional support, call the Beyondblue coronavirus mental wellbeing support service on 1800 512 348 or Lifeline on 13 11 14 any time of the day and night. For women’s health-related information in your language, contact the Multicultural Centre for Women’s Health on its toll free number 1800 656 421 between 10am to 4pm.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now